பக்கம்:சுலபா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 99

ஏதாவது தாறுமாருக முடிந்து வெறும்வாயை மெல்லும் பத்திரிகைகளுக்குக் கிசுகிசு அவல் கிடைத்து, "சாமியாருக்கு வலைவிரித்து நடிகை சுலபா ஏமாந்தாள்’’ என்று கிண்டில் செய்தி ஆகிவிடக் கூடாதே என்றுதான் அவள் பயந்தாள். ஒவ்வொரு நிபந்தனையாகக் கோகிலா விடம் கூறிஞள்.

"அந்த சந்தியாசிக்கு நான் யாரென்றே தெரிய வேண்டிய அவசியமில்லை கோகிலா! கூடியவரை லெளகீக உலகின் தொடர்புகளே அற்ற நைஷ்டிக பிரம்மசாரியாயிருந்தால் நல்லது! என் புகழும் பழியும் அவருக்குத் தெரிய வேண்டிய தில்லை."

"சினிமாவுக்கும் தியேட்டருக்கும் போகாத சந்நியாசி என்றே வைத்துக் கொண்டிாலும் கூட மூலைமுடுக்கு எல்லாம் வீடியோ உள்ள இந்த நாளில் உன்னை யாரென்று தெரியாத சாமியாரா இல்லையா என்று கண்டு பிடிப்பது சிரமம்.'

'தெரிந்தால் என்னை வெறுத்து ஒதுக்கி விடிலாம். சே. என்று கேவலமாக நினைக்கலாம். எச்சிற்பண்டம் என ஒதுக்க நினைக்கலாம்! ஒரு சாமியாருக்கு என் அழகு மட்டும் போதாதே?"

- 'பழங்களில் அணிற்கடித்த எச்சில் ரொம்ப விசேஷம் என்று சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள்! நீ அப்படி ருசியான வள் சுலபா.”* -

'ugఉత్తాతీతా அது சரியாயிருக்கலாம். 15f5fఉతాతీతా ஒத்துவராது. அணில்கடித்த பழமும் நாமும் ஒவிருகிவிட முடியாது கோகிலா" *. "உனக்குத் தெரியாது சுலபா சில பேருக்கு அணில் கடித்த பழங்கள் தான் ரொம்பப் பிடிக்கும்.'

மீண்டும் திரும்பத் திரும்பத் தோழி கோகிலா இப்படியே ஒப்பிட்டது சுலபாவுக்குப் பிடிக்கவில்லை. குற்றமுள்ள மனசு குறுகுறுப்பது போல் உள்ளே குறுகுறுத்தாலும் தன்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/101&oldid=565769" இலிருந்து மீள்விக்கப்பட்டது