பக்கம்:சுலபா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 母碰》L謝腳

குத்திக் காட்டும் உள் நோக்குடன் கோகிலா பேசியிருக்க மாட்டாள் என்று சுலபா நன்ருக அறிந்திருந்தாள்.

எந்த ஓர் இளம் பெண்ணும் இன்னேர் இளம் பெண்ணுக் குச் செய்து தரக்கூடும் என்று கற்பனையில் கூட எதிர்பார்க்க முடியாத உதவியைத் தனக்கு வலுவில் முன் வந்து செய்யத் துணிந்திருக்கும் கோகிலாவின் செயலில் குறை காண முயலக் கூடாது என்று தன் மனத்தையே அப்போது சுலபா கடிந்து கொனடாள். மேனியில் பொன் நிறம் ஒளிரும் சந்தனமும் பச்சைக் கருப்பூரமும் மணக்கக் கூடிய - ஊளைச் சதையில் லாத செதுக்கி எடுத்தது போல வைரம் பாய்ந்த ஒருவசீகர மான பிரம்மசாரியை - பெண் என்ருல் என்ன என்று முதல் முதலாக இவள் மூலமே அறியப் போகிற ஒரு பிரம்மசாரியை -அந்த அநுபவத்தின் எல்லாத்ரில்களுடனும், கிக்குகளுடனும் அடையப் போகிருேம் என்ற உணர்வு நினைக்கும் போதே சுலபாவைப் புல்லரிக்கச் செய்தது. கடந்த காலத்தில் அழகற்ற அருவருப்பான வியர்வையும், பீடி. சிகரெட்டும் நாறுகிற குரூரமான பல ஆண் உடம்புகளை வியாபார ரீதியாகத் தான் மகிழாமல மிஷினபோல அவள் மகிழச் செய்திருந்தாள், அத ைவிளைவு இன்று நாற்றமும், வியர்வையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. சுததமும நறுமணமுமே அவளுடைய இைைறய இலட்சியங்களாயிருந்தன. அழுக்கடைந்து கசங்கிய ரூபாய் நோட்டுக்களை வைக்க வேறு இடமின்றி ஜாக்கெட்டுக்குள்ளும் இடுப்பிலும் வாங்கிச் சொருகி மேலும் அழுக்கடையச் செய்த பழைய நாட்கள் குமட்டிய காரணத்தால் இன்று புத்தம் புதுச் சலவை நோட்டுக்களை மட்டுமே அவள் கைகளால் தீண்டினுள்.

பரிசுத்தத்தை அநுபவித்து அழுக்குகளைப் பழிவாங்க விரும்பினள். நறுமணங்களே நுகர்ந்து துர் நாற்றங்களை மறக்க விரும்பினள். வீட்டில் ஏ.சி. அறைகள் மணமாக இருக்கக் கூடப் பம்பாயிலிருந்து வாசனையை இதமாக ஸ்பிரே செய்யும் ஒரு சிறிய அழகான எலெக்ட்ரிக் கைமிஷன் வாங்கி வைத் திருந்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/102&oldid=565770" இலிருந்து மீள்விக்கப்பட்டது