பக்கம்:சுலபா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jhr. Eir. 168

புஜங்களும் நினைவு வந்து அவள் அப்படியே சொக்கிப் போய்ச் சித்தப் பிரமை பிடித்தவள் போல அமர்ந்து விட்டாள். --

'சந்தேகமே இல்லை! நீ ஒரு மேனியாக் தான்.' "மேனியாக்ஞ...?’’

சுலபாவுக்கு அந்த வார்த்தையைக் கோகிலா விளக்கி விவரித்தாள். -

உடன் சுலபாவிடமிருந்து பதில் வந்தது.

'இந்த கஜாரண்ய சுவாமிகள் மாதிரித் தேஜஸ்வியான சுந்தரபுருஷனை அநுபவிக்க முடியும்னு - அநுபவிச்சிட்டு அதுக்கு விலையா என் சொத்துச்சுகம் எல்லாத்தையும் ஈடு கொடுக்கக்கூட நான் தயார்.'

'நீ நரகத்துக்குத் தான் போவாய்' என்று அவரது பக்தர்கள் உன்னைச் சபிப்பார்கள்.'"

'அந்தப் பேரழகை ஒருமுறை அநுபவிப்பதே சுவர்க்க மாக இருக்கும். அப்படி அநுபவம் கிடைத்துவிட்டால் அதன் பிறகு நரகத்துக்குப் போகக் கூட நான் தயார்,'

"எல்லா ஆசாபாசங்களையும் மோக முனைப்புக்களையும், ஜெயித்துவிட்டுச் சிரிக்கிற ஒரு துறவியின் மேல் நீ மோகம் கொள்கிருய்!'"

  • பலரை ஜெயித்தவனை ஜெயிப்பது தான் சுகம்! தோற்ற வர்களை ஜெயிப்பதில் ஜெயம் எங்கே இருக்கிறது?’’

'லோ எல்லாவற்றையும் - எல்லாரையும் வென்ற ஒருவன் உனக்குத் தோற்க வேண்டும் ரொம்பத்தான் பேராசைக்காரிடீ நீ உன் பேராசை விநோதமானதுதான். '

எப்போதோ நடந்திருந்த இந்தப் பழைய உரையாடிலி

லிருந்தும் இதில் உதாரணமாக இடம்பெற்ற கஜாரண்ய சுவாமி என்ற பேரழகரின் உருவத்திலிருந்தும் சுலபாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/105&oldid=565773" இலிருந்து மீள்விக்கப்பட்டது