பக்கம்:சுலபா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pìr ·tir. 109

அவளைக் கூட்டிக் கொண்டு போய் விடுவேன். உங்கள் அருட்

பார்வையில் அவன் திருந்தி விடுவாள் என்பது என் நம்பிக்கை" என்றேன். -

நான் கூறியதைக் கேட்டு அவர் சிரித்தார். அந்தச் சிரிப் பில் நானே மயங்கிச் சொக்கிப் போனேன்.

"அவள் பகலில் வந்தால் என்ன? இதில் ஒளிவு மறைவு எதற்கு?' என்று கேட்டார்.

பெரிய வசதியுள்ள குடும்பத்து யுவதி! பகலில் வழுக்கி விழுந்தோரைத் திருத்தி வாழ்வு தரும் இந்த ஆசிரமத்திற்குத் தேடிவரக் கூச்சப் படுகிருள் சுவாமீ! உங்களைப் போல் ஒரு மகானுக்கு அருள்புரிய எந்த நேரமானுல் என்ன? நீங்கள்தான் பெரிய மனசு பண்ணி அவளைத் திருத்த வேணும்' என்றேன். வேண்டியபடியே 'சரி! அழைத்துவா!'-என்ருர் திவ்யானந் தர்." - l

சுலபா கோபமாகக் குறுக்கிட்டாள்.

"மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல இப்படி ஏற்பாடு பண்ணி விட்டு வந்திருக்கியேடீ கோகிலா! விடிய விடிய உட்கார்த்தி எனக்கு உபதேசம் பண்ணிக் காலையில் விபூதி குங்குமம் கொடுத்துத் திருப்பி அனுப்பிவிடப் போகிரு.ர்.'

"அதுவரை உன் சாமர்த்தியங்கள் எங்கேடி போயிருக்கும்? பிறந்ததிலிருந்து புலன்களை அடக்கிய ஓர் இளம் வயதுச் சாமி யாருடன் கிறங்க அடிக்கும் போதை யூட்டுகிற பேரழகுள்ள நீ ஓரிரவு தனியே விடப்படிப் போகிருய், வேறு யாரும் உங்கள் இருவரைத் தவிர அங்கு இருக்கப் போவதில்லை. பன்னிரண்டு மணி நேரம் உபதேசம் கேட்கிற அளவு படுமந்தமானவளாடி

நி? * - -

என்ன என்ன செய்யச் சொல்கிருய்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/111&oldid=565779" இலிருந்து மீள்விக்கப்பட்டது