பக்கம்:சுலபா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 111

மேயப்போகிற மாட்டுக்குக் கொம்பிலே புல்லைக் கட்டி விடமுடியாது என்பார்கள்...'

"நான் மாடா?’’

'இல்லை பசு? காளையைத் தேடிப் போகிருய். தேடிவருகிற பசுவைப் பெரும்பாலும் காளை கைவிடுவதில்லை,'

கோகிலா கிண்டல் செய்கிருளோ என்று பட்டது சுலபா வுக்கு பதில் சொல்லாமல் இருந்தாள். கோகிலாவே மேலும் பேசலாளுள்:

"உன் சக்தி உனக்குத் தெரியாது.டீ சுலபா! விசுவாமித்திர முனிவனே மேனகையிடம் மயங்கிப் பல்லிளித்திருக்கிருன். திவ்யானந்தர் உன்னிடம் எந்த மாத்திரம்? உன் அழகுக்கு இந்தச் சாமியார் ஒரு சவால் என்று நினைத்துக் கொண்டு போ. உன்னல் அவரை ஜெயிக்க முடியும்.'

-ஜெயிப்பதில் சந்தோஷமில்லை என்று நீயே சொல்லி யிருக்கிருய்! "

"இந்தமாதிரி ஒர் ஆண்பிள்ளையை ஜெயிப்பதே அவனிடம் எல்லாவற்றையும் தோற்பதற்குத் தானே?"

பணம் ஏதாவது கொண்டுபோக வேண்டுமா?"

கொண்டுபோனுல் தப்பில்லை! நல்ல காரியம் செய்கிருர். ரொக்கம்தான் வேண்டும் என்பதில்லை. "செக்"காகவே தரலாம். இன்கம்டாக்ஸ் விலக்கு உத்தரவுகூட வாங்கியிருக் கிருர்.'

"நானும் டிொனேஷன் தரத்தான் போகிறேன். எவ்வளவு என்று அங்கே போன பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் கோகிலா!' -

"உன்னையே இழக்கப் போகிருய்! பணத்தை இழப்பதா பெரிய காரியம்?' - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/113&oldid=565781" இலிருந்து மீள்விக்கப்பட்டது