பக்கம்:சுலபா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| G

வெள்ளிக்கிழமை விடிந்தது. அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து நீராடித் தயாராளுள் சுலபா. சரியாக நாலில் இருந்து நாலேகாலுக்குள் காருடன் வருவ தாகக் கோகிலா முதல் நாளிரவே ஃபோனில் சொல்லியிருந் தாள். தாங்கள் இருவரும் எங்கே போகிருேம் என்பது யாருக் கும் தெரிய வேண்டாம் என்றும் சுலபாவிடம் எச்சரித்திருந் தாள் கோகிலா. -

சுலப மிக எளிமையாகவும் அதே சமயத்தில் கவர்ச்சி யாகவும் தன்னை அலங்கரித்துக் கொள்வதற்கு ஏற்ற சாதனங் களை உடன் எடுத்துக் கொண்டிருந்தாள் வாசனைப் பொருள்கள் உயர் ரக செண்ட், சந்தன. அத்தர், புனுகு ஜவ்வாது என்று அள்ளிக்கொண்டு போளுள், செக் புஸ்தகம் எடுத்துக் கொண்டாள். குறும்புக்காரக் கண்ணனை நாடிப் போகும் ஒரு இளம் கோபிகையைப் போன்ற மனநிலையில் இருந்தாள் சுலபா மனத்தில் ஒரே சிருங்கார அவஸ்தை,

அன்று அவள் தன்னைக் கண்ணுடியில் பலமுறை அழகு பார்த்துக் கொண்டாள். சமீப காலத்தில் இப்படி ஒர் அழகுப் பரபரப்பை அவள் அடைந்ததே இல்லை. தான் அழகு என்பதில் அவளுக்குச் சந்தேகமோ, இரண்டாவது அபிப்பி ராயமோ கண்ணுடியில் பார்த்து உறுதி செய்துகொள்ளும் அவசியமோ இதுவரை ஏற்பட்டதே இல்லை, இன்றுதான் முதல் முதலாக அந்த இனிய பதற்றமும், பரபரப்பும் அவளுக்கு ஏற்பட்டன. அதை அவளே உணர்ந்தாள், அநுபவித்தாள். அவஸ்தைப்பட்டாள். . . . . . . .

மெய்சிலிர்க்கும் ஒர் அநுபவத்தை இதுவரை வேறு பெண்களையே தீண்டியறியாத ஒரு பரிசுத்தமான ஆண்மகனத் தீண்டப் போகிருேம் என்ற என்ணத்தைத் தாங்கி இதயமே சுகமாகக் கனத்து வீங்கியிருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/114&oldid=565782" இலிருந்து மீள்விக்கப்பட்டது