பக்கம்:சுலபா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 113

மூன்ருவது மனிதருக்கு இந்த நாசூக்கான விஷயம் பரவிவிடக்கூடாது என்பதல்ை அத்தனை பெரிய ஏ. சி. பென்ஸ் காரில் கோகிலாவும் சுலபசவும் மட்டுமே பயணம் செய்தார்கள். கோகிலா எக்ஸ்பர்ட் டிரைவர், பெண் பயில் வாகி மாதிரிக் கோகிலாவுக்கு நல்ல கட்டுமஸ்தான உடம்பு. இலேசில் சோர்ந்து விடமாட்டாள். "நீயே ஒட்டறதrலே நிறுத்தி நிறுத்தி வேனுமானப் போகலாம். சிரமப் படாதே. அவசரம் ஒண்னுமில்லே-’’

என்று சுலபா வீட்டிை விட்டுக் கிளம்பும்போது சொன் ஞன். 'கையிலே லேடஸ்ட் பென்ஸை வச்சுக்கிட்டு அதையே என்னலே கட்டை வண்டி மாதிரி ஒட்ட முடியாது. சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு நேரம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. கோயிலைத் தரிசனம் பண்ண வர்ரவங்க உன்னைத் தரிசனம் பண்றமாதிரி ஆயிடிப்படாது. அஞ்சேமுக்கால் ஆறுக்குள்ளே போயிட்டிம்னக் கூட்டம் சேராமே எல்லாம் காதும் காதும் வச்சாப்ல முடியும்’

என்ருள் கோகிலா. சுலபா மறுத்துச் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள்,

"இங்கே திருப்பதியிலே சாது தரிசனம் முடிஞ்சு ஊர் திரும்பருேம்கிறதுதான் மத்தவங்க கிட்ட நாம சொல்ல வேண்டியது. ஆனல் பகல் முழுதும் இங்கேயே ஏ, சி, சூட்டில் தங்கிவிட்டு இருட்டியதும் இரகசியமாக மதனபள்ளி ரோட்டி லுள்ள திவ்யசேவாசிரமத்தில் உன்னைக் கொண்டுபோய் திவ்யானந்தர் உவினை எதிர்பார்த்துத் தனியாக் காத்திருப் பார்.'"

"நீ என்ன செய்வதாக உத்தேசம்டி கோகிலா-'

"நான? நான் உன்னை அங்கே டிராப் பண்ணியதும் நேரே திருப்பதி திரும்பி ஏற்கனவே நாம் ரிஸர்வ் செய்த அதே ஏ. சி. சூட்டில் ஓய்வு கொண்டுவிட்டு மறுநாள் அதாவது நாளைக்காலையில் உன்னைப் பிக் அப் செய்ய ஆசிர மத்துக்கு மீண்டும் வருவேன்-’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/115&oldid=565783" இலிருந்து மீள்விக்கப்பட்டது