பக்கம்:சுலபா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சுலபr

"என்னை நிராயுதபாணியானவளாக நிர்ப்பலமான வளாகத் தனியே அந்த இளம் சாமியாரிடம் விட்டுவிட்டு நீ போய்விடுகிருய்?’’

மோக யுத்தத்தில் ஆணுே பெண்ணுே நிராயுத பாணிகள் ஆவதில்லை. அவர்களுடைய தாயங்களே அவர்களுக்குப் போதுமான ஆயுத பலங்கள்-' பல விஷயங்களைத் திவ்யானந்தரிடம் மனசு விட்டுப் பேச முடியாமல் போயிற்று என்ருய்! அவர் என்னைச் சந்திக்கும் போது தனியாயிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் நீ எப்படி விதித்தாய்?"

'நீ மனசு விட்டுப் பேசக் கூச்சப்படுவாய் என்று சொல்லி அவருடைய சம்மதத்தைப் பெற்றேன். அந்த நிர்மலமான இளைஞர் சந்தேகம், பயம், ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற் பட்டவராயிருக்கிருர். கள்ளம் கபடிமே தெரியவில்லை. உடனே சம்மதித்தார். இளம் பெண்ணுன ஓர் அழகியை இரவில் தனியே சந்திக்கச் சொல்லி மற்ருேர் பெண்வந்து வேண்டு கிருளே, இது என்ன சதியோ என்றெல்லாம் நினைக்கிற வராகவே அவர் தென்படி வில்லை,' "

"உடம்பு மட்டுமின்றி மனசும் கறைபடாதது என்று சொல்,' .

"நிறையப் படித்தவர். சீரழிகிற பெண்களைத் திருத்திப் புது வாழ்வு அளிக்கும் நற்பணிக்காகவே தம் வாழ்வை அர்ப் பணித்திருக்கிருர்.'

பகுப்பைய ரெட்டி போல் பெண்களைச் சீரழிப்பதற்கு வாழ்க்கையையே செலவழிப்பவர்கள் உள்ள இதே உலகில் தான் இந்தத் திவ்யானந்தரும் இருக்கிரும்."

"குப்பைய ரெட்டி கூழாங்கல்! இது மாணிக்கம்."

கோகிலா படுவேகமாகக் காரைச் செலுத்தினுள். பலபல வென்று விடிகிற நேரத்துக்குக் கார் திருமலையில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/116&oldid=565784" இலிருந்து மீள்விக்கப்பட்டது