பக்கம்:சுலபா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 壶剑》茜醇

'உன்னைப் போன்ற பெரிய குடும்பத்துப் பெண்கள் எப்போதும் பணஉதவி செய்ய முன்வருகிறீர்களே ஒழிய இப்படி விடுதியில் நேரடியாக ஈடுபட்டுச் சேவை செய்ய முன் வருவதில்லை. உன் தோழியும் அன்று ஒரு தொகை டிொனேஷன் கொடுத்தாள், நீயும் தொகை போடாமல் ஒரு செக் கொடுத்திருக்கிருய்!”

"என் மாசு நீங்க எப்படிப்பட்ட சேவையைச் செய்யும்படி நீங்கள் கட்டளையிட்டிாலும் நான் செய்யத் தயாராயிருக் கிறேன்-'

"திருந்துவதற்கு விரும்புகிற யாரும் தவற்றை உணர வும், ஒப்புக்கொள்ளவும் துணிய வேண்டும். ஏழைப் பெண்கள் தவறுகளை உணர்ந்து ஒப்புக் கொண்டு திருந்துகிருர்கள். உங்களைப் போன்ற வசதியுள்ள குடும்பத்துப் பெண்கள் தவறு களை மறைத்துக் கொண்டு வாழப் பழகுகிறீர்கள். இதுபோன்ற இடங்களுக்கு வரக்கூடப் பிறர்பார்க்காத நேரம், பிறர் பார்க் காத தனிமை எல்லாம் உங்களுக்கு வேண்டியிருக்கிறது.”

蕭歡 發壽 -

"வழுக்கிவிழுந்த பெண்களின் இல்லத்தில் நம்மைப் பார்த்ததாக யாரும் யாரிடமும் பேசிவிடக்கூடாது என்ற பயம் பாசாங்காக உருவாகிவிடுகிறது-"'

சுலபாவுக்குச் சுரீரென்று உரைத்தது.

"எளியேனைப் பொறுத்தவரை பாசாங்கு எதுவுமில்லை சுவாமீ! வீடு வாசல், பணம், சுகம், எல்லாவற்றையும் நான் மதிக்கவில்லை. நீங்கள் இடும் கட்டளையைச் சிரமேற் கொண்டு செய்யத் தயாராயிருக்கிறேன்.'

"இப்படிப் பெண்களுக்குப் புனர்வாழ்வளிக்ரும் ஆசிர மத்தை என்போல் ஒரு துறவி நடித்துவதில் சில தர்ம சங்கடங்கள் இருக்கின்றன, இந்தப் பணியில் எனக்கு உதவியாக லட்சுமீகரமான முக அமைப்புள்ள- பார்த்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/124&oldid=565792" இலிருந்து மீள்விக்கப்பட்டது