பக்கம்:சுலபா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சுலயா

ராத்திரியில் பல அநாதைப் பெண் குழந்தைகளுக்கும் ஒரே ஒரு விவரம் தெரிந்த ஆண்குழந்தைக்கும் அவள் தாயாகி இருந்தாள். தூரத்தில் ஓடை நீர்ப்பரப்பில் மூழ்கும் தீக் கொழுந்தாய் மின்னிய அந்தத் துறவியின் உடம்பை நோக்கி, "மற்றை நம் காமங்கள் மாற்று-என்று பிரார்த்தித்தாள் சுலபா. அவளது காமங்கள் மாறியிருந்தன. தகனமாகியிருந் தன.

அவள் யாரையே எரிக்க வந்தாள். எரிந்து போயிருந் தாள். ஜெயிக்க வத்தாள். தோற்றுப் போயிருந்தாள். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த மின்னல் தாக்கி அவள் உள்ளே யிருந்த அசுரகுணங்கள் சாம்பராகி விட்டிருந்தன.

இருபத்தெட்டு வயது பிறந்தவுடன் அத்த இருபத்தெட்டு வயதின் மொத்தமான பாவச் சுமைகளையும் அழுக்குகளையும் இப்படி ஒரு அதிகாலையில் ஒரு காட்டு ஓடையில் நீராடிக் களைந்து விட்டு புதிதாக முதல் வயதிலிருந்து மறுபடி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த மாதிரி மனசு இந்த விநாடியில் சத்துவகுணமே நிரம்பிச் சாந்தமாயிருந்தது. ஏன் இப்படி மாறினுேம்? எந்த நொடியில் மாறினுேம்? எதற்காக மாறிளுேம்?-எல்லாமே மாயம்போல் நடந்து முடிந்திருந்தன. நம்பமுடியாத மாற்றம். இனி மாறவே முடியாத புது நம் பிக்கை. கார் வருகிற ஓசை கேட்டது. கோகிலா தனது இந்தக் கோலத்தையும் இந்த முடிவையும் எப்படி எதிர் கொள் வாள் என்று நினைத்துக் கற்பனை செய்ய முயன்ருள் சுலபா.

ஒற்றையடிப் பாதையில் இருவரும் சந்தித்துக் கொன் டார்கள். கோகிலாவின் முகத்தில் ஒரே வியப்பு. .

'இதல்லாம் என்னடி வேஷம் சுலப மாற்றுப் புடிவைக் காக இந்த யூனி ஃபாரத்தை எடுத்துக்கிட்டியா?"

'நேற்றுவரை வாழ்விலும், படங்களிலும் நான் போட்ட வைதான் வேஷம் கோகிலா இன்றும் இனியும் இதுதான் stagih! ** ه يا - ,- - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/128&oldid=565796" இலிருந்து மீள்விக்கப்பட்டது