பக்கம்:சுலபா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 127

அவள் குரலிலிருந்த உண்மையையும், உருக்கத்தையும் பார்த்துப் பதறிய கோகிலா என்னடீ ஆச்சு உனக்கு' என்று அருகில் வந்து கைகளைப் பற்றினுள்.

"ஒன்றும் ஆகவில்லை! இந்தr! இதை நீ எடுத்துக் கொண்டு போ."

கோகிலா அந்தப் பொட்டலத்தைக் கை நீட்டி வாங்கினுள், பிரித்துப் பார்த்தாள். சுலபாவின் விலையுயர்ந்த வைரத் தோடுகள், மூக்குத்தி, மோதிரம், மாலை, வளைகள் எல்லாம் அதில் இருந்தன.

'இதுவரை பழகிய நமது சிநேகிதத்தின் அளைடியாள மாக இவற்றை இனி நீ வைத்துக் கொள்." -

"விளையாடதேடி இதெல்லாம் இந்த வயசிலே உன் குலே முடியாது. நான் என்னமோ நெனச்சு இங்கே உன்னை இட்டுக்கொண்டு வந்துவிட்டேன். பிள்ளையார் பிடிக்கக் குரங்காப் போச்சே? இதென்னடீ விபரீதம்?... பாதி நிற்கிற படம் எல்லாம் என்ன ஆறது? வீடு வாசல், சொத்துச் சுகத்தை எல்லாம் விட்டு இங்கே இந்தக் காட்டில் சாமியாரிச் சியா இருக்கணுமா நீ? நான் விடமாட்டேன். இந்தக் கோா வேஷத்தைக் களைந்துவிட்டு என்னோடு உடனே புறப்படுடி!'

கோகிலா உணர்ச்சி வசப்பட்டுப் பதறிஞள், இன்னும்

சிறிது நேரத்தில் அழுதுவிடுவாள் போலிருந்தது. அவளால் சுலபாவின் இந்த மெடமார்பஸைத் தாங்க முடியவில்லை.

சுலபாவிடமோ கோகிலாவின் இந்த வார்த்தைகள் எந்த உணர்வையும், எந்தச் சலனத்தையும் உண்டாக்கவில்லை. தெளிவான-நிதானமான குரலில் கோகிலாவுக்குப் பதில் சொன்னுள் அவள்.

"இனி என்னல் நடிக்க முடியாது! நான் வாழவேண்டும். வாழப் போகிறேன். ஒப்பந்தம் உள்ள புரொட்யூலர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு. ஆடிட்டிரையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/129&oldid=565797" இலிருந்து மீள்விக்கப்பட்டது