பக்கம்:சுலபா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Br. tir. 11

டம் சொல்லாமலும், அவள் சம்மதத்தைப் பெருமலும் அவ ளுக்குத் தெரியாமலுமே அவளை ஒரு விபசார விடுதியில் இருநூற்றைம்பது ரூபாய்க்கு விற்று விட்டுப் போனன் அவன் நம்பிய முதல் மனிதன். குண்டுரிலிருந்து அவள் பட்டினம் கிளம்பியபோது அவள் பெயர் சுப்பம்மா. அவளை ஆசைகாட்டி அழைத்துவந்து சந்தையில் மாடுவிற்பது போல் விற்று விட்டுப் போன குப்பைய ரெட்டியை அதன்பின் அவள் சந்திக்கவே முடியவில்லை.

2

எந்த விடுதிக்கு அவளுக்குத் தெரியாமலேஅவள் விற்கப்பட்டிருந்தாளோ அந்த விடுதியின் அழுக்கடைந்த நாள்பட்ட நாற்றமெடுத்த படுக்கையிலிருந்து அதிர்ஷ்டம் அவளைக் காப்பாற்றியது. -

ஏதோ ஒரு பலவீனமான நிலையில் அங்கே அவளிடம் வந்த ஒரு தயாரிப்பாளர் சினிமாவுக்கான முகக்கட்டு அவளிடம் இருப்பதாகக் கண்டு பிடித்து அவளை அந்த நரகத் திலிருந்து விடுவித்துத் தமக்கு மட்டும்ே உரிமையாக்கித் தனியாக ஒரு சிறிய வீட்டில் குடியமர்த்தினர். அவளை அவர் மட்டுமே அதுபவிக்க முடிந்தது.

முன்பு தசை வியாபார விடுதியில் இருந்தவரை எதுவும் அவளுக்கு என்று தனியாகவோ, சொந்தமாகவோ இருந்த தில்லை. அவளுடைய உடல் உட்படத்தான். அதுதான் அந்த விடுதி நடைமுறை . - , -

அங்கே புடைவை. சோப்பு, சிப்பு. அலங்காரத்துக்கான கவரிங் அணிகலன்கள் எல்லாமே விடுதிக்குச் சொந்தம், மாலை

வேளைகளில் தொழிலுக்கு அணிவகுத்து நிற்பதற்கு முன் அவற்றை அவரவர்கள் உபயோகிக்கலாம். கிராக்கிக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/13&oldid=565681" இலிருந்து மீள்விக்கப்பட்டது