பக்கம்:சுலபா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பார்கவி

பெரியவர் சிவவடிவேலுவுக்குக் கண்களைக் கட்டி நடுக் காட்டில் கொண்டு போய் விட்ட மாதிரி இருந்தது. விவசாயம். எஸ்டேட் நிர்வாகம் எல்லாம் அவருடைய குடும்பத்துக்குப் பரம்பரையாகப் பழக்கமானவை. ஹோட்டல் நிர்வாகம் புதிது. அந்த நிர்வாகத்துக்கு அவரும் அவருக்கு அந்த நிர்வாகமும் புரிபடவில்லை. முன்னே போல்ை இழுத்தது. பின்னே போளுல் உதைத்தது. சரிப்பட்டு வரவில்லை,

அவர் மகன்களில் மூத்தவன் தண்டபாணி அவரோடு கோபித்துச் சண்டை போட்டுக் கொண்டு தனியே போய் டில்லியில் உத்தியோகம் பார்க்கிருன், இளையவன் குமரேசன் பகல் எல்லாம் வீட்டில் படுத்துத் தூங்கிவிட்டு மாலையில் பட்டி மண்டபம், கவியரங்கம் என்று அலைந்துவிட்டு அகாலத்தில் புத்தம்புதுக் கைத்தறித் துண்டுகளும், கசங்கிய மாலையும், இருபது முப்பது என்று கவரில் வைத்துக் கொடுக்கப்படும் அழுக்கு ரூபாய் நோட்டுக்களுமாக வீடு திரும்புகிருள். ஓட்டல் நிர்வாகத்துக்கு அவர்களால் ஒருவிதமான ஒத்தாசையுமில்லை. எதிலும் சந்தேகமும், அவநம்பிக்கையும் உள்ள அவரை நெருங்கவே அஞ்சினர்கள் அவர்கள். அவர் ஒரு தனித் தீவாக ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.

விவசாய சமூகத்திலிருந்து தொழில் சமூகத்துக்கு மாறிய காலகட்டத்தில் உச்சவரம்பு காரணமாக அதிக நிலங்களை விற்று வந்த பணத்தில் இருந்தும் மேற்கொண்டு கடனுக வாங்கிய தொகையிலிருந்தும் ஒருவழியாக ஒட்டல் பார்கவி போர்டிங் அண்ட் லாட்ஜிங்கைக் கட்டி முடித்துத் திறந்தும் ஆயிற்று. திறந்த பின்புதான் பிரசினைகளே ஆரம்பமாயின. நஷ்டமும் ஆரம்பமாயிற்று. - -

ஒட்டல் பார்கவி போன்ற ஒரு பெரிய ஒட்டலைத் தாங்கும் அளவிற்கு ஜமீன் குருபுரம் பெரிய ஊரும் இல்லை. ஆளுல் அதன் கேந்திரத்தன்மை காரணமாக ஓர் ஓட்டலுக்கு அவசிய மும் தேவையும் இருந்தன. ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/132&oldid=565800" இலிருந்து மீள்விக்கப்பட்டது