பக்கம்:சுலபா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 EJg fsss*

கிறது என்ருல் போட்டி போட்டுக்கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று வாங்க முன்வருவார்கள். குருபுரத்தில் அப்படி யாரும் வரவில்லை. நஷ்டத்தில் நடக்கிறது என்று வேறு பேராகி விட்டதால் பயந்து ஒதுங்கினர்கள். அருகில் வரவே அஞ்சிஞர்கள். அவரே தொடர்ந்து நடத்தியாக வேண்டி வந்தது.

இந்தப் பிரச்சினைக்குத் தானுகவும் தீர்வு காண முடியாமல், பிள்ளைகளுடைய ஒத்தாசையும் கிடைக்காமல் திண்டாடினர் சிவவடிவேலு. ஆடிட்டரிடம் போய் அழுது புலம்பாத குறை யாக மன்ருடிஞர்.

இந்த மாதிரி என்னன்னு புரியாமே நஷ்டித்திலே நடக்கிற தொழில்களைச் சரிப்படுத்தற வேலையைச் செய்யற துக்கே டெல்லியிலே ஒருத்தர் இருக்கார். "சந்திரஜித் குப்தா'ன்னு பேர், சார்ட்டட் அக்கெளண்டிெம் மட்டுமில்லை. ஹாவர்டு யூனிவர்சிடியிலே எம். பி. எ. பண்ணியிருக்கார், "பிஸினஸ் கிளினிக்’னு வச்சிருக்கார், தன்னையும் பிஸினஸ் டாக்டர்’னு சொல்லுகிருர். தொழில் நிர்வாகத்திலே "எலிக் இண்டஸ்ட்ரி ரெஸ்க்யூ மெத்தட்ஸ் (நோய்வாய்ப்பட்ட தொழில்களை மீட்கும் முறைகள்) என்று தனிப் பிரிவை மட்டும் ஆராய்ச்சி பண்ணிப் படிச்சிட்டு வந்திருக்கார். அவரு வந்து பார்த்து யோசனைகள் சொன்னப்புறம் எத்தனையோ நஷ்டிப் பட்டி தொழில்கள் மீண்டும் லாபம் அடைஞ்சிருக்கு, பதினஞ்சு நாள் அல்லது அதிகமாகப் போனல் ஒரு மாசம் நம்ம கூடவே தங்கினர்ணு எங்கே கோளார்னு கண்டுபிடிச்சிடுவார். அவரை வரவழைக்கலாமா?' ஆடிட்டர் கேட்டார்.

ஆடிட்டர் சொன்ன விஷயம் கொஞ்சம் புதுமையாகவும் புரியாததாகவும் இருக்கவே சிவவடிவேலு யோசித்தார். வருகிறவர் எவ்வளவு செலவு வைப்பாரோ, என்ன கேம் பாரோ என்று எண்ணித் தயங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/134&oldid=565802" இலிருந்து மீள்விக்கப்பட்டது