பக்கம்:சுலபா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 135

கையுமாகக் குருபுரத்துக்கு வந்து சேர்ந்தாள். ஏதோ போராட்டம் காரணமாகக் கல்லூரியையும் ஹாஸ்டலையும் இரண்டு வாரங்களுக்கு இழுத்து முடிவிட்டார்களாம்!

'இப்போ அதுவும் நல்லதுதான். மிஸ்ஸ் குப்தாவுக்கு உதவியாக இவளை இருக்கச் சொல்லிடலாம்' என்றார் ஆடிட்டர்.

துணைக்கும் உபசரணைக்கும் ஓர் ஆள் தேவைப்படுகிற அளவு இருந்தால், மிஸஸ் குப்தா இன்னும் என்னென்ன செலவு வைக்கப் போகிருளோ என்று செலவைப் பற்றி எண் ணிக் கவலைப்படத் தொடங்கினர் சிவவடிவேலு, நடுவில் கல்லூரி மூடப்பட்டு மகள் ஊர் வந்ததில் அவருக்கு ஏகப்பட்ட வருத்தம். போராட்டம் கீராட்டம் என்று அடிக்கடி படிப்புப் பாழாகிறதே?' என்று கவலைப் பட்டார் அவர்.

குருபுரம் மிராசுதார் சிவவடிவேலு அதிகப் படிப்பறிவு இல்லாத ஒரு நாட்டுப்புறப் பணக்காரர். தழும்பேறிய கன்ஸர்வேடிவ் மனப்பான்மையும் கஞ்சத்தனமும் உள்ளவர், எதையும் துணிந்து செய்யாதவர். தயங்கித் தயங்கி அடி எடுத்து வைப்பவர். பத்துக் காசு செலவழிப்பதற்கு ஐம்பது ரூபாய் பெறுமானமுள்ள கவலையைப் படுகிறவர்.

தந்தையின் முதலீட்டில் அவரோட கூட இருந்து தொழில் நடத்தாமல் மூத்த மகன் தண்டபாணி, தனியே உத்தியோகத் துக்குப் புறப்பட்டுப் போனது இதனுல்தான் என்பது ஆடிம் டருக்கே நன்ருகத் தெரியும்.

இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தும், இரண்டாவது பிள்ளை குமரேசன், முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து-என்று பட்டி மன்றங்களில் முழங்கிக் கொண்டிருந் தான். பெண் 'பார்கவி’ மட்டும் சாதுவாய் அப்பாவுக்கு அடங்கிய குழந்தையாகக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந் தாள். சிவவடிவேலுவுக்குப் பார்கவி செல்லப் பெண். அதனல் தான் தாம் கட்டிய ஒட்டலுக்குப் பார்கவி' என்றே பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/137&oldid=565805" இலிருந்து மீள்விக்கப்பட்டது