பக்கம்:சுலபா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பார்கவி

சூட்டியிருந்தார். "குடும்ப நிர்வாகம், சொத்து, எஸ்டேட் நிர்வாகம் இவைகளைப் பையன்களிடம் பிரித்து விட்டு விட்டு நிம்மதியாக மனைவியோடு காசி, இராமேஸ்வரம் என்று க்ஷேத்ராடனம் சென்று வாருங்கள்! உங்கள் மனசு நிம்மதியா யிருக்கும்." என்று ஆடிட்டர் அனந்த் பல முறை இதமாக எடுத்துச் சொல்லியும் சிவவடிவேலு அதைக் காது கொடுத்துக் கேட்டதே இல்லை. எல்லாவற்றையும் தாமே கட்டிக் கொண்டு அழுதார். சுமைகளைத் தாங்கினர்.

"இந்நாளில் உங்களுடைய அணுகுமுறைகள் கிழடுதட்டிப் போனவை. ஆண்டே' என்று விவசாயக் கூலி வாசற்படிக்குக் கீழே பத்தடி விலகி நின்று கை கூப்பிய காலத்துப் பண்ணை யார் மனப்பான்மையோடு இன்று தொழிலை ஆள முடியாது. நிறைய விட்டுக் கொடுத்துப் பழகும் தோழமை இன்று வேண்டும்,' என்று சொற்பொழிவுகளில் பேசுவது போலவே அவரிடமும் இளைய மகன் குமரேசன் ஒருநாள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தான்.

"உன்னை மகளுகப் பெத்த குற்றத்துக்காக நீ இந்த விட்டிலே இருக்கிறதைச் சகிச்சுக்கறேன். ஆல்ை நீ என்னை மாத்தமுடியாது' என்று சிவவடிவேலு கறாராக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார்.

இப்படி மூத்த மகன், இளைய மகன் இருவருமே இரண்டு வேறு கோணங்களில் நவீனமான சிந்தனைகள் உள்ளவர்களாக இருந்தும் அவர்களை நம்பி எதையும் கொடுக்காத காரணத் தாலேயே அவர்களுடைய சிந்தனை துருப்பிடித்துப் போகும்படி செய்துவிட்டார் சிவவடிவேலு. மூத்தவன் விழித்துக் கொண் டாள. அந்த வீட்டிலேயே இருந்து சீரழியாமல் தனக்குப் பிடித்த ஓர் அழகிய படித்த ஏழைப் பெண்ணைத் தேடிக் கல்யாணம் பண்ணிக் கொண்டு டில்லியில் போய் உத்தியோகம் பார்த்தான். அவனது.திருமணம்கூட அவரது விருப்பத்துக்கு மாருகத்தான் நடந்தது. சின்னவன் தூங்குவதற்கு மட்டும் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தான். மகள் பார்கவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/138&oldid=565806" இலிருந்து மீள்விக்கப்பட்டது