பக்கம்:சுலபா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சுலபா

தகுந்த மாதிரி எதிர்பார்க்கிற வாடிக்கையாளர்களுக்கு ஏற்றமாதிரி யார் வேண்டுமானல் அவற்றை அணிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் அழுக்கடைந்த கிழிந்த. கவர்ச்சியற்ற அவரவரிகளுடைய சொந்த உடைகளைத்தான். அவர்கள் அணிந்து கொள்ள வேண்டும். இதுதான் அந்த விடுதியின் நடைமுறையாயிருந்தது. எல்லார்க்கும் எல்லாம் சொந்தம்-யாரும் எதையும். எவரையும் தனியாக உரிமை கொண்டாட முடியாது என்பது போல ஒருவகைப் பொது நிலைமைதான் அங்கே நிலவியது. அங்கிருந்து அவளைப் பிரித்துத் தமது தனியுடைமை ஆக்கிக் கொண்ட கிழட்டுத் தயாரிப்பாளர் ஒரு நாள் பின் மாலைவேளையில் யாரும் எதிர் பாராத விதமாக மாரடைப்பால் காலமானபோது சுப்பம்மா என்கிற சுலபா'வின் பொற்காலம் தொடங்கியது.

அவளை விடுதியிலிருந்து விடுவித்த போதே சுப்பம்மா” என்கிற பழைய தேய்ந்து போன-வேலைக்காரிகளுக்கும், எடுபிடிகளுக்கும், பாத்திரம் தேய்ப்பவர்களுக்குமே உரியது போல ஒலிக்கும் பெயரை நீக்கிச் சுலபா என்று சினிமா வுக்கே உரிய முறையில் புதுப் பெயரிட்டு ஞானஸ்நானம் செய்திருந்தார் தயாரிப்பாளர். சுலபா'வைத் தயாரிப்பாளர் களும், டைரக்டர்களும், சினிமாத் தொழிலுக்கு நிதியுதவி செய்பவர்களும் சுலபமாக அணுக முடிந்தது. இது அவள் வெற்றிகளின் இரகசியம். இந்த ரிஷிமூலம், நதி மூலங்களை இப்போது யாரும் கேட்கத் தயாராயில்லை. ஆனல் அவள் வரலாற்றின் முதல் நுனியில் இப்படிச் சில மூலக்காரணங்கள்" இருந்தன என்பது மட்டும் உண்மை. இந்த மூலகாரணங் களால் அவள் வளர்ந்திருந்தாள். . -

இவற்ருல் அவள் எச்சரித்து வைக்கப்பட்டிருந்தாள் என்பதும். போதுமான அளவு விழிப்புடன் இருந்தாவி என்பதும் உண்மை. மனிதர்களைப் பற்றிய அவளது பால பாடங்களாக இவை உள்ளே நிரம்பியிருந்தன. புகழ், பழி, பர், பெருமை, எல்லாமே பணவசதியைப் பொறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/14&oldid=565682" இலிருந்து மீள்விக்கப்பட்டது