பக்கம்:சுலபா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零

ஆறடி உயரத்துக்கு வாட்-சாட்டமாய்க் கம்பீரமாகத் தோற்றமளித்த குப்தாவைப் பார்த்ததும் சிவவடிவேலுவுக்கு ஒருவகைத் தாழ்வு மனப்பான்மையே உண்டாகிவிட்டது. அவன் மனைவி பச்சைக் கிளிபோல் அழகாயிருந்தாள். பஞ்சாபிப் பெண்கள் போல குர்த்தா-சூரிதார் அணிந்நிருந் தாள். இருவருமே சிரிக்கச் சிரிக்கப் பேசினர்கள். கலகலப் பாகப் பழகிஞர்கள். புதியவர்கள், அன்னியர்கள்-வேற்று மொழி வேற்றுப் பிரதேசக்காரர்கள் என்ற சங்கோசங்களையும் தற்செயலாகக் கடப்பதுபோல் இயல்பாகத் தவிர்த்துவிட்டுப் பழகினர்கள். ஆடிட்டரும், அவர் மகளும் அத்தனை வேகமாக இல்லாவிட்டாலும் சிறிது நேரத்திலேயே அந்த மெல்லிய உணர்ச்சிக் கோடுகளைத் தாண்டிவிட்டுச் சுபாவமாகக் குப்தா வுடனும் திருமதி குப்தாவுடனும் பழகத் தொடங்கிவிட்டார் கள். கிணற்றுத் தவளையாகவே இருந்துவிட்ட சிவவடிவேலு தான் திணறினர். சிரமப்பட்டார். ஒட்டாமல் கஷ்டப்பட்டார். ஒதுங்கி ஒதுங்கி நின்ருர்,

ஒரு பட்டிக்காட்டால் யானையைப் பார்த்தது போல அந்தப் புதியவர்களை மருள மருளப் பார்த்தார். மதுரையிலி ருந்து குருபுரத்திற்குப் புறப்படுமுன் எங்காவது அவர்களுக்குக் காப்பி சிற்றுண்டி அருந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்ருர் ஆடிட்டர்.

"அதுக்கென்ன? நம்ம கான்சா மேட்டுத் தெரு ராயர் தண்ணிர்ப் பந்தலிலே பிரமாதமர இட்லி, வெண்பொங்கல் ஆமவடை எல்லாம் கிடைக்கும் ' என்ருர் சிவவடிவேலு.

இதைக் கேட்டு ஆடிட்டருக்குச் சிரிப்பு வந்தது. ராயர் தண்ணீர்ப்பந்தல் என்பது நவீன ஒட்டல் நாகரிகம் பரவு வதற்கு முன் காலத்து மதுரையில் ஏற்பட்டிருந்த ஒரு பத்துக் கடை. அங்கே உட்கார டேபிள் நாற்காலி கிடையாது. நின்றபடியே இலையைக் கையில் ஏந்தி ராயரிடம் வாங்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/140&oldid=565808" இலிருந்து மீள்விக்கப்பட்டது