பக்கம்:சுலபா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பr fகவி

நஷ்டத்தின் காரணம் புரியாமல் குழம்பினர் சிவ வடிவேலு.

அங்கேயே சாப்பாடும் தங்க இடமும் கொடுத்து மாதம் பத்துப் பதினைந்து ரூபாய் ரொக்கச் சம்பளத்தில்தான் பரிமாறு கிறவர்கள், மேஜை துடைக்கிறவர்கள் அமர்த்தியிருந்தார். மலையடிவாரத்து ஊராகையில்ை விறகும். கரியும் படு மலிவா கக் கிடைத்தன. அதல்ை காஸ் அடுப்புச் செலவே இல்லை. தங்குகிறவர்களைத் தவிர ரெஸ்டாரெண்ட்டில் வந்து சாப்பிடு கிறவர்களுக்குப் பில்கூடக் கிடையாது. ரெண்டு ரூபாய் இருபது காசு, என்று ஏலம் போடுகிற குரலில் பரிமாறுகிற பையன்களே சொல்லிவிடுவார்கள். ஸ்டேஷனரி அச்சிடுதல் செலவுகளே குறைவு.

ஒட்டல் பார்கவியின் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவரே முன்னின்று கவனித்ததால் ரொம்பச் சிக்கனமாகவே எல்லாம் நடந்தது.

தம்மிடம் வேலை பார்த்த பழைய விவசாயிகள் வசிக்கும் பட்டி தொட்டிகளிலிருந்து அதிகம் படிப்பு வராமல் வீட்டோடு தங்கிப் போன பையன்களை மூன்று வேளைச் சாப்பாடு, கையில் ரொக்கம் என்று பேசி மிகமிகக் குறைந்த சம்பளத்துக்கு ரூம் பாய்ஸ் ஆகவும், சர்வர்களாகவும் நியமித்திருக்கும் தைரியத் தில் மாதாமாதம் சுளையாக லாபம் எதிர்பார்த்தார் அவர் . ஆளுல் லாபம் வராததோடு நஷ்டம் வந்தது.

அங்கே நகர்ப்புறங்களில் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டிார் என்று ஒட்டல்களுக்கு ஸ்டார் வேல்யூ அளித்து நடத்துகிறவர் கள் பணத்தை வாரி இறைக்கும் ஒட்டல்கள் கூட லாபத்தை அள்ளித் தருகையில் தாம் சிக்னமாகவே நடத்தும் ஓட்டல் ஏன் லாபம் தரவில்லை என்பது அவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது. குழம்பினர். இராப்பகல் தூக்கமின்றித் தவித்தார்.

அவரோடு முதலிலேயே கருத்து வேறுபாடு கொண்டு ஒதுங்கி விட்டதால் மகன்கள் இதில் அவருக்கு உதவ முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/142&oldid=565810" இலிருந்து மீள்விக்கப்பட்டது