பக்கம்:சுலபா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gr. Ear. 141

வரவில்லை. மகள் படிக்கிற வயதில் இதையெல்லாம் பற்றிக் கவலைப்பட முடியாது. செல்லப்பெண்ணுய் அப்பாவிடம் நல்ல பேர் வாங்கிளுள்.

ஆடிட்டர் அனந்துதான் சிவவடிவேலுவின் ஃப்ரெண்டு ஃபிலாஸ்பர், கைடு ஆக மீதியிருந்தார். ஆனல் அவர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவும் சிவவடிவேலு தயாராயில்லை. ஆடிட்டர் கூறுவதையே சிவவடி வேலு கேட்டு நடக்கத் தயாராயிருப்பார் என்று தெரிந்திருந் தால் டில்லியிலிருந்து'வியாபார வைத்தியர் அல்லது தொழில் நலிவுச் சிகிச்சை நிபுணரான குப்தாவையும் அவன் மன வியையும் இத்தனை அரும்பாடுபட்டு வரவழைத்து இருக்க வேண்டியதில்லை. நிறையப் பணச்செலவு வைத்து பாஷையும் பழக்கவழக்கமும் புரியாத வெளி ஆள் ஒருவனை வரவழைத்துத் தான் சிவவடிவேலுவுக்குச் சிகிச்சையளித்தாக வேண்டும் போலிருந்தது. நாட்டு வைத்தியமும், கை மருந்துகளும் அவரைக் குணப்படுத்தப் போதாதென்று ஆடிட்டர் விமானத் தில் மருந்தை" வரவழைத்திருந்தார். டில்லியிலிருந்து வரவழைத்திருந்தார்.

பாண்டியனில் முதலில் ஃப்ரூட் ஜூஸ், அப்புறம் ஆரஞ்சு மர்மலேட், கார்ன் ப்ளேக் மில்க், பிரட் டோஸ்ட், ஸ்கிராம்பிள்டு எக், காப்பி என்று குப்தாவும், மிஸஸ் குப்தாவும் ஆர்டர் செய்தார்கள். ஆடிட்டரும் அதே அயிட்டங்களைச் சொன்னார். பார்கவி. மசால் தோசையும் காப்பியும் என்ருள். சிவனடிவேலு வெறும் காப்பி மட்டும் போதும் என்று தம்மைச் சிக்கனமாக நிறுத்திக் கொண்டார். பில்லைப் பற்றிய பயம் அவருக்கு.

மொத்தமாக பில் சர்வீஸ் சார்ஜ் உட்பட 167 ரூபாய் எழுபது காசு வந்தது. ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தார் ஆடிட்டர். பில்லை ஆடிட்டர்தான் கொடுத்திருந்தார் என்ருலும் பின்னல் மொத்தச் செலவுக் கணக்கையும் சிவவடிவேலுதான் ஏற்கவேண்டியிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/143&oldid=565811" இலிருந்து மீள்விக்கப்பட்டது