பக்கம்:சுலபா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 artzea

'என்ன மிஸ்டர் அனந்த்? மிஸ்டர் சிவவடிவேலு ஏன் வெறும் காப்பியோடு நிறுத்திக் கொண்டார்? அவருக்குப் பசி இல்லையா?” என்று குப்தா ஆங்கிலத்தில் ஆடிட்டரைக் கேட்க, ஆடிட்டர் ஒரு கணம் தயங்கி யோசித்து. ஹி இஸ் ஆல்வேஸ் எ புவர் ஈட்டர்...' என்று சமாளித்தார். வேறு என்ன சொல்வது? - o

ஆளுல் அதே சமயத்தில் மிஸஸ் கு ப்தா தணிந்த குரலில் பார்கவியைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். நீ எக். ஃபிஷ் எல்லாம் சாப்பிடணும் அம்மா! இருபது வயசுக்கு மேல் என்கிருய்! ஆரோக்கியமான வளர்ச்சியே இல்லையே. எலும்பும் தோலுமாகச் சோனிப் பெண்ணுய்க் காட்சியளிக்கிருயே? இதே பதினெட்டு இருபது வயசில் வடக்கே ஒரு பஞ்சாபிப் பெண் பளபளவென்று அரபிக் குதிரை மரதிரி வாளிப்பாய் மின்னிக்கொண்டிருப்பாள், நாலைந்து வாலிபப் பையன்கள் அவள் பின்னுல் பைத்தியமாய்ச் சுற்றிக் கொண்டிருப் பான்கள். நீ என்னடா என்றால்...நோயாளிப் பெண் மாதிரி இருக்கிருயே?’ என்று கூறிக் கண்களைச் சிமிட்டினுள். மேலும் கிண்டலில் இறங்கிளுள். உங்கப்பா பார்கவின்னு பேர் வச்ச நீயும் ஆரோக்கியமாயில்லே, உன்னைப் போலவே பார்கவின்னு பேர் வைக்கப்பட்டி ஒட்டிலும் ஆரோக்கியமா இல்லை. ரெண்டையுமே சரிப்படுத்தியாகணும்." -

பார்கவியின் முகம் சிவந்து அவள் வெட்கப்பட்டாள்.

இந்தக் குப்தாவும் இவன் மனைவியும் எப்படி பார்த்த மறு வினாடி சொந்த மனிதர்களிடம் பழகுகிற மாதிரி அன்னியர் களிடம் பழகி ஒட்டிக் கொண்டு உறவாட முடிகிறது என்ற வியப்பிலிருந்து சிவவடிவேலுவால் இன்னும் மீளவே முடிய வில்லை.

அவர்கள் பான்டியனில் சிற்றுண்டி காப்பியை முடித்துக் கொண்டு காரில் குருபுரம் புறப்பட்டார்கள். பிரயாணத்தில் போதே அந்த ஊர் சுற்றுப்புறம் விவசாய நிலைமை பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/144&oldid=565812" இலிருந்து மீள்விக்கப்பட்டது