பக்கம்:சுலபா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பார்கவி

ஆடிட்டர் அனந்த், "இங்கேதான் நீங்கள் இருவரும் தங்கப் போகிறீர்கள். இது மிஸ்டர் சிவவடிவேலுவின் பங்களா...அவருடைய மகள் பார்கவி உங்கள் தேவைகளைக்

கவனித்துக் கொள்வாவி’ என்று குப்தாவிடம் சொன்னர்.

குப்பா அதை ஏற்கவில்லை. உடனே மறுத்துவிட்டான்.

  • நோ.நோ...நான் இங்கே தங்கறதிலே அர்த்தமே இல்லை. ஆன் த ஸ்பாட் ஸ்டடி பண்ணனும்னு நான் ஒட்டில் பார்கவியிலேயே தங்கியாகனும்’ என்ருன் அவன்.

ஒட்டல் பார்கவியில் அவனுக்கு வேண்டிய செளகரியங் களும் உபசரணையும் கிடைக்குமா என்று யோசித்துத் தயங் கிளுர் ஆடிட்டர்.

பார்கவியில் அங்கே மானேஜர் முதல் மேஜை துடைக் கிறவன் வரை யாருக்கும் ஆங்கிலமோ இந்தியோ சுட்டுப் போட்டாலும் ஒரு வார்த்தை கூட வராது.

இதற்கிடையே திருமதி சிவவடிவேலு, வாங்க ஐயா! வாங்கம்மா." என்று எதிர்கொண்டு இருவரையும் வர வேற்ருள்.

"மிஸ்டர் குப்தா ஷி இஸ் மிஸிஸ் சிவவடிவேலு. இவள் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நல்வரவு கூறுகிருள்,”* என்று குப்தாவிடிம் கூறினர் ஆடிட்டர். .

சந்திரஜித் குப்தாவும் திருமதி குப்தாவும், 'நமஸ்தேஜீ' என்று அந்தம்மாளைக் கைகூப்பி வணங்கினர்.

உடன் வந்த பார்கவி மாடியில் அவர்களுக்கான விருந் தினர் அறையைத் தயார்ப்படுத்துவதற்குப் போயிருந்தாள். ஆடிட்டருக்குத் தர்மசங்கடமாயிருந்தது. திருமதி சிவவடிவேலு வுடன் அவர்களை விட்டு விட்டுப் போகலாமென்ருல் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். சிவவடிவேலுவிடம் விட்டுச் செல்வதென்ருலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/146&oldid=565814" இலிருந்து மீள்விக்கப்பட்டது