பக்கம்:சுலபா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பார்கவி

ஆளுல் இப்போது போய்ப் பார்த்தால் உண்மை நிலை பரிதாபமாயிருந்தது. வாஷ்பேசின் உடைந்து போய்ச் சில ரூம்கள், கண்ணாடி உடைந்து சில ரூம்கள். லெட்ரீன் பீங்கான் உடைந்து சில ரூம்கள். ஜன்னல் கொக்கி உடிந்து சில ரூம்கள் என்று தாறுமாருகி இருந்தன.

வெளியூர் ஆட்கள் அதிகம் வராததாலும் அக்கம்பக்கத்துக் கிராமத்து ஆட்கள் தங்கியதாலும் அறைகளை நாற அடித் திருந்தார்கள். சுவரெல்லாம் ஒரே குங்குமக் கறை. மூலை களில் தாம்பூலம் போட்டுத் துப்பிய வெற்றிலைச் சாற்றுக் கறை, ஒட்டடையும் நூலாம்படையும் காடு மண்டியிருந்தன. அறைக்குள் புகை படிந்திருந்தன. இருந்தும் எப்படியோ சிரமப்பட்டு மலைத் தொடரைக் காண்கிற மாதிரி வியூ இருந்த ஒரு காற்ருேட்டமான அறையைச் சுத்தம் செய்து ஒழுங்கு படுத்திக் குப்தாத் தம்பதியினருக்குத் தயார்ப்படுத்தினர்கள்.

மிராசுதார் சிவவடிவேலுவுக்குச் சொந்தமாக இருந்த ஓர் ஐம்பது ஏக்கர் தென்னந் தோப்பில் நடுவாக அந்த ஒட்டில் கட்டப்பட்டிருந்தது. ஊரிலிருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்தது. இயற்கையழகு கொஞ்சும் இடமாக இருந்ததால் ஓர் ஓட்டலுக்கு ஐடியலான லட்சணங்கள் கொண்டிருந்தும் சரியாக மெயிண்டிெயின் பண்ணாமல் கெட்டிருந்தது, சீரழிந்து போயிருந்தது.

இப்படி இங்கே குப்தா தம்பதிகளுக்கு அறையையச் சுத்தம் செய்து தயாராக்க வேண்டியிருந்ததால் அவர்கள் நீராடி உடை மாற்றிப் பகலுணவை முடிக்கச் சிவவடிவேலு வின் பங்களாவிலேயே தற்காலிகமாகத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. குப்தா தயக்கத்துக்கும் ஆட்சேபணைக்கும் பின்பே தற்காலிகமாக அதற்கு இணங்கின்ை.

"மிஸ்டர் குப்தா இன்று பிற்பகலில் நீங்கள் விரும்பு கிறபடி ஒட்டல் பார்கவியிலேயே தங்கிக் கொள்ளலாம். வீடு தேடி வந்தவர்களை ஒருவேளை சாப்பிடச் சொல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/148&oldid=565816" இலிருந்து மீள்விக்கப்பட்டது