பக்கம்:சுலபா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jhr. LJr. 13

அமையக் கூடிய சினிமா உலகில் அவள் பெற்றிருந்த அநுபவங்கள் அவளை எதையும் சமாளிக்கிற தயார் நிலையில் வைத்திருந்தன . அநுபவங்களே அவளுடைய பலமா யிருந்தன.

வாழ்க்கையில் அநுபவங்களை விடப் பெரிய ஆசிரியன் யாரும் இருக்க முடியாது. பவிளிக் கூடங்களில் மழைக்கும் ஒதுங்கியிராத அவள் கற்றதெல்லாம் வாழ்க்கை அநுபவங் களிலிருந்துதான். வாழ்வின் அநுபவங்கள் உடனிருந்தே கற்றுக் கொடுப்பவை என்பதை அவள் நன்ருகப் புரிந்து கொண்டிருந்தாள். அநுபவங்களின் மூலம் பாடங்கள் பதி வதைப் போல வேறு எவற்றின் மூலமும் அத்தனை அழுத்த மாகப் பதிவதில்லை என்பதைச் 巴仔6DL厝” உணர்ந் திருந்தாள். தடுமாறி விழுந்த அநுபவங்கள்தான் மேற் கொண்டு தடுமாறி விழாமல் அவளைக் காப்பாற்றின என்று சொல்ல வேண்டும். விழுந்தவற்றிலேயிருந்து எழுவதற் கும் எழுந்தவற்றிலே இருந்து இனி விழாமல் இருப்பதற்கும் அவள் தெரிந்துகொண்டிருந்தாள். .

பரந்து விரிந்த இந்த உலகில் இப்போது அவளுக்கு உண்மையான உறவினர் என்று யாருமில்லை. தொழில் வசதி களுக்காக வீட்டோடு நீண்ட நாட்களாக உடனிருக்கும் ஆயாக் கிழவி நரசம்மாவைத் தன் தாய் போல் படிப்பிடிப்புக் களுக்கும், அவுட்டோர்களுக்கும் அழைத்துச் செல்லுவதுண்டு. நாசம்மாவைத் தவிரக் கடிதப் போக்குவரத்து-வரவு செலவுகால்வrட்-ஷெட்யூல் விவரங்கள் குறித்த டைரி வைத்துக் கொள்ள ஒரு காரியதரிசிப் பெண்ணும் இருந்தாள். 'கவிதா' என்று அழகான பெயர் அவளுக்கு. பி. ஏ. பட்டதாரி. தன்னு டைய நம்பர் ஒன். நம்பர் டு ஆகிய இரண்டு கணக்கு வழக்கு களையும் கூட இவனை நம்பிவிட்டிருந்தாள் சுலபா.

ஆளுல் அதற்கும் காரணம் இருந்தது. கவிதாவின் தாய் மாமன்தான் சுலபாவின் ஆடிட்டர் அவளுடைய வரவு செலவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/15&oldid=565683" இலிருந்து மீள்விக்கப்பட்டது