பக்கம்:சுலபா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பார்கவி

உற்சாகமாகத் துள்ளித் திரிய வேண்டும். பாலோடு காட்லிவர் ஆயில் கலந்து சாப்பிடு. சிக்கன் எஸென்ஸ் அல்லது சூப் எடுத்துக் கொள். எக்ஸர்ஸைஸ் பண்ணு ஸ்லிம்மா இருக் கணும். அதோட அழகா லட்சணமாவும் இருக்கணும். நாலு பேரோட கலகலப்பா சிரிச்சுப் பேசப் பழகணும். தலைக்கு "எக்' ஷாம்பு யூஸ் பண்ணு. இன்ன சோப்பு ஃபேர் காம்ப்ளெக்ஷன் தரும்,' என்றெல்லாம் சொந்தப் பெண்ணுக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தாள் திருமதி குப்தா, பார் கவிக்கு அவளேயும் அவளுக்கு பார்கவியையும் ரொம்பவும் பிடித்துப் போயிற்று.

குப்தாவும், திருமதி குப்தாவும் ஒட்டிலுக்குப் போய்த் தங்கிய பின்பும் பார்கவி பெரும் நேரத்தைத் திருமதி குப்தாவுடனேயே செலவழித்தாள். இரவில் தூங்கும் நேரத் துக்கு மட்டும்தான் வீட்டுக்கு வந்தாவி அவள்,

பார்கவி மலைமேலிருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குத் திருமதி குப்தாவை ஒருநாள் அழைத்துச் செல்ல விரும்பினள். ஆஞ்சநேயர் டெம்பிள், அனுமார் டெம்பிள் என்று சொல்லிப் பார்த்தும் அது என்ன கோவில் என்று குப்தாவின் மனைவிக்குப் புரியவே இல்லை. அப்புறம் இந்தியில் அதை எப்படிச் சொல்வ. தென்று ஆடிட்டர் மாமாவைக் கேட்டாள்.

"இந்தியிலே பஜ்ரங்பலின்'ன ஆஞ்சநேயர். பஜ்ரங்பலி மந்திரீனு சொல்லு, புரியும், என்ருர் ஆடிட்டர்.

குப்தா கருமமே கண்ணுக, வந்த வேலையில் மூழ்கி விட்டான். குப்தாவோடு கூட ஆடிட்டர் இருந்தார். தேவை யான போது சிவவடிவேலுவையும் உடன் வைத்துக் கொண். டார்கள். மற்ற வேளைகளில் அவரைத் தவிர்த்தார்கள்.

வந்த முதல் ஐந்து நாள் ஆப்ஸர்வேஷனுக்காகச் செலவழித்தான் குப்தா. நல்ல கூட்டி நேரத்தில் ரெஸ்டிா ரெண்டில் போய் உட்கார்ந்து கவனித்தான். பரிமாறும் பையன்களில் சிலர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/150&oldid=565818" இலிருந்து மீள்விக்கப்பட்டது