பக்கம்:சுலபா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புசர்கவி

சரக்கு மாஸ்டருக்கு நிலக்கடலைப் பருப்பையும் அந்தக் கடையே வழங்கி வந்தது. மளிகைக் கடைக்காரர் தனியே ஒரு தொகை ரகசியச் சம்பளமாகச் சரக்கு மாஸ்டருக்கும் ஸ்டோர் கீப்பருக்கும் கொடுத்து வந்ததையும் கண்டு பிடித்தார்கள். துப்புத் துலங்கியது.

பார்கவி லாட்ஜில் செக்ஷனை நிர்வகித்து வந்த கரும்பாயிரம் என்ற ஆள், தங்க வருகிற ஆட்களிடம் எல்லாம் கடுகடுப்பாகப் பேசினான். ரிஜிஸ்தர்-பில்-ரசீது இல்லா மலே அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து குருபுரத்துக்கு செகண்ட் ஷோ சினிமா பார்க்க வந்து இரவே ஊர் திரும்ப முடியாமல் அதிகாலை முதல் பஸ்ஸுக்கு ஊர் திரும்புகிற பலரிடம் ஐந்து, பத்து என்று ரொக்கம் வாங்கிக் கொண்டு அறைகளில தங்க விட்டான். அவனுடைய சம்பளமும் மிக மிகக் குறைவு என்பதைக் குப்தா கவனித்தான். ஆப்லர் வேஷன் முடிகிறவரை இதையெல்லாம் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி குப்தா ஆடிட்டரிடம் கேட்டுக் கொண் டிருந்தான். சிவவடிவேலுக்குக்கூட அவர்கள் எதையும் சொல்லவில்லை.

ஹோட்டல் பார்கவியின் போர்டிங் லாட்ஜிங் நடவடிக் கைகளை ஆப்ஸ்ர்வ் செய்ததோடு விடாமல் ஆடிட்டரிடம் சில வருடக் கணக்கு விவரங்கள். பாலன்ஸ் வீட் எல்லா வற்றையும் வாங்கிப் பார்த்தான் குப்தா, துருவித் துருவிப் பார்த்தான். - -

அங்கே ஹோட்டல் பார்கவி ஆரம்பித்தது முதல் ஒன்றரை வருடத்திலேயே மின்விசிறிகள், ஹீட்டர்கள் முதலிய எலெக்ம் ராணிக் சாமான்கள் ரிப்பேர் வகையில் நம்ப முடியாத செலவுத் தொகைக்குப் பில்கள், ரசீதுகள் இருந்தன. புதிய மின்விசிறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/152&oldid=565820" இலிருந்து மீள்விக்கப்பட்டது