பக்கம்:சுலபா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 Ermfffssf...

எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குப்தா கூறலாஞன். "ஹோட்டல் தொழில், விவசாயம் மாதிரி இல்லே. இப்ப விதைச்சோம். நாளை அறுப்போம்னு முடிச்சிடக் கூடியதும் இல்லை. விவசாயத்திலே எப்பவாவதுதான் களை எடுக்கணும். இதுலேயோ தினசரி களை எடுத்துக்கிட்டே இருக்கணும், இல்லேன்ஞ புதர் மண்டிப் போயிடும். சிவவடிவேலு தம் முடைய கஞ்சத்தனத்தினலே குறைஞ்ச சம்பளத்துக்கு ஆள் தேடறதா நெனைச்சுக்கிட்டுக் கிம்பளம் பண்ணிக்கிற ஆளா உள்ளே விட்டிருக்கார். இதே ஆட்களை வச்சிக்கிட்டு இனிமே இந்த ஒட்டலை உருப்படியா வளர்க்க முடியும்னு எனக்குத் தோணலை. என்னதான் இனிமேல் சம்பளத்தைக் கூடக் கொடுத்தாலும் கிம்பளம் பண்ற வழிகள் இவங் களுக்குப் பழக்கமாயிட்டதாலே இனிமே இவங்க அதிகச் சம்பளம் கிடைச்சாலும் அந்தப் பழைய கிம்பளப் பழக்கத்தைக் கைவிடமாட்டாங்க. சம்பளத்தையும் அதிகமாகக் கொடுத்து இதே ஆளுங்களே வச்சுக்கிறது ரெட்டை நஷ்டம் ஆயிடும்?"

"என்னதான் செய்யலாம்? ஒரு வழி தெரிஞ்சாகனுமே இப்போ." - -

"ஒட்டலைக் குளோஸ் பன்னணும்.’’

"அதுக்காகவா இத்தனை சிரமப்பட்டு டில்லியிலிருந்து உங்களைக் கூப்பிட்டோம்? இந்த யோசனையை நானே சிவ வடிவேலுவுக்குச் சொல்லியிருப்பேனே?"

"சொல்வி முடிக்கிறதுக்குள்ளேயே அவசரப்படlங்களே மிஸ்டர் அனந்த். முழுக்கக் கேளுங்க, குளோஷர் நோட்டீஸ் ஒட்டி இப்போ இருக்கிற ஆட்களை முழுக்கக் கணக்குத் தீர்த்து அனுப்பிடணும் முதல்லே அதைச் செய்தாகணும்.'

'அப்புறம்...'

'ரெண்டு மூணு மாசம் சீரமைப்புப் பணிகளைச் செய்து முடிச்சு மறுபடியும் புது ஆட்களை நல்ல சம்பளத்திலே வேலைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/154&oldid=565822" இலிருந்து மீள்விக்கப்பட்டது