பக்கம்:சுலபா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 55

கிறவர்கள் பார்க்கச் சுத்தமாக இருக்கணும். சாப்பிட வருகிறவர்கள் கஸ்டமர்கள் கண் காண மூக்கை நோண்டறது, தலையைச் சொறியறது. காது குடையறது இதெல்லாம் பண்ணிட்டு அப்புறம் அதே கையாலே காப்பி கொன் டார்ந்து கொடுக்கிறதுன்னு வந்தால் எவருக்குச் சாப்பிடி மனசு வரும்? மூணு நாள் தாடியும் இடுப்பிலே லுங்கியும் மார்பில் முன்டா பனியனுமாக ஆஃப் டிராயரிலே ஆடு வெட்டற ஆள் மாதிரிச் சில சர்வர்களை இங்கே பார்த்தேன். அப்படி ஆளுங்க வர்ற கஸ்டிமர்சைக் குறைச்சிடுவாங்க. வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கிட்டு உள் அண்டிர்வேரும், புல-புலாவென்று மயிரடர்ந்த முழங்காலும் தெரிகிற மாதிரிச் சில பேர் பரிமாறுகிருங்க. ஃபேமிலியோடி வர்ற ஒரு கஸ்டமர் இந்த மாதிரி ஆளுங்களைப் பார்த்தா அடுத்த தடிவை இந்த ஹோட்டிலுக்கு வரவே மாட்டார். ஐரோப்பாவிலே பல ரெஸ்ட்டாரெண்டுகளிலே பேசுகிற சத்தமே அடுத்த டேபிளுக் குக் கேட்காது. பரிமாறியது போதும், மேலும் வேண்டும். என்பதை எல்லாம்கூடக் கஸ்டமருடைய சைகையிலேயே புரிஞ்சுப்பாங்க. ஃபோர்க்கையும், கத்தியையும் இணைகோடு மாதிரி பிளேட்டிலே வச்சா இன்னும் சாப்பிட ஏதோ மீதமிருக் கிறது என்றும் சேர்த்து வைத்துவிட்டால் முடித்தாயிற்று என்றும் அர்த்தப் படுத்திக் கொள்கிருர்கள். இங்கேயோ ஹோட்டல் முழுவதும் ஒரு போர்க்களம் போலக் கூப்பாடு மயமாயிருக்கிறது." * ... ,

"இதையெல்லாம் சரிப்படுத்த உங்க சிகிச்சை என்னன்னு சொல்லுங்க, மிஸ்டர் குப்தா! நோய்களையே விவரிச்சிட்டுப் போளுல் எப்படி? சரிப்படுத்தறது எப்படின்னு சொல்லுங்க."

"பொறுங்க சார்! இதை முதல்லே நாம கலந்து பேசி முடிவு பண்ணிட்டு அப்புறம் உங்க சிவவடிவேலுவுக்குச் சொல்லணும். நேரடியாச் சொன்னல் அதிர்ச்சி தாங்காது. அதேைல முதல்லே உங்ககிட்டே கொஞ்சம் விவரமாகவே சொல்றேன். மிஸ்டர் அனந்த்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/157&oldid=565825" இலிருந்து மீள்விக்கப்பட்டது