பக்கம்:சுலபா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ray#sest

வேண்டிய தொகையைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்ந் தான் குமரேசன்.

அந்த டில்லி பிஸினஸ் டாக்டர் உன்னைப் பார்க் கணும்னாருப்பா!' என்று காரைச் செலுத்திக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த குமரேசனிடம் தெரிவித்தார் ஆடிட்டர்.

"இதுக்கா கூப்பிட்டீங்க? எங்கப்பா காலம் வரை அவர் சொத்திலோ வியாபாரங்கள், தொழில்களிலோ எங்கண்ணனே,

நானே தலையிட மாட்டோம்னு நீங்களே அந்த ஆளுக்குச் சொல்லியிருக்கலாமே. சார்?"

'எதுக்குன்னு தெரியலே. ஆனல் அவர் உன்னைப் பார்த்தே ஆகணும்கிருர்.'

‘'எதுக்கு வீண் வேலை? எங்கப்பா காலம்வரை கொக்குக்கு ஒன்ணே மதின்னு பழைய மிட்டா மிராசு மனப்பான்மை யிலேயே எதையாச்சும் சும்மா பண்ணிட்டிருப்பார். நீங்க ஒருத்தருதான் வேலை மெனக்கெட்டு அவரைக் கட்டி மாரடிக் கிறீங்க! அவரை நம்பி இந்த மனுஷனை வேற டில்லியிருந்து வரவழைச்சிருக்கீங்க! இந்த ஆளு சொல்ற எதையும் அவர் கேட்கப் போவதில்லை. ஹோட்டல் பழைய குருடி கதவைத் திறடின்னு நஷ்டத்திலே தான் நடக்கப் போவுது.

"இப்ப என்கிட்டே சொல்ற இதையே அந்த டில்லி ஆசாமி கிட்டேயும் சொல்லேன். உண்மை நிலை என்னென்ன வது அந்த ஆளுக்குப் புரியட்டும்' -

"இதை நான் வந்துதான் அவர்கிட்டே சொல்லணுமா என்ன? நீங்களே இதுக்குள்ளே சொல்லியிருக்கணுமே?"

"என்ன இருத்தாலும் நான் மூளுவது மனுஷன்தானே

அப்பா!' - ". . .

'நீங்களாவது மூணுவது மனுஷளுவது? நீங்கதானே

எங்கப்பாவுக்கு ஃபிரெண்டு, ஃபிலாசபர், கைடு எல்லாம்?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/160&oldid=565828" இலிருந்து மீள்விக்கப்பட்டது