பக்கம்:சுலபா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பார்கவி

இவங்க உறிஞ்சிட்டிருக்காங்க சர்வர், ரூம் பாய்ஸ்ணு இவரோட பழைய நிலங்கரைகளில் காத்திட்டிருந்தவனையும் களை எடுத்திட்டிருந்தவனையும் காவல் காத்துக்கிட்டு இருந்த வனையும் குறைஞ்ச சம்பளத்துக்குப் போட்டிருக்கார். நவீன மானேஜ்மெண்ட் கான்ஸெப்ட்டே இவருக்குப் புரியாது. புரிய வைக்கவும் முடியாது. பார்கவிங்கிற இந்த நோயாளியை உங்ககிட்டே காண்பிக்க ஒப்புக்கிட்டிதே எங்கப்பாவைப் பொறுத்தவரை பெரிய புரட்சிதான்!'

"நீங்க சொல்றது எதையும் நான் மறுக்கலே மிஸ்டர் குமரேசன்! இது உங்க குடும்பச் சொத்து. உங்கப்பா உங்க காலத்துக்குப் பில் நாளைக்கு உங்களுக்கும் உங்க உடன் பிறந்தவர்களுக்கும் வர வேண்டியது. இன்னிக்கு இதிலே இவ்வளவு ஊழல் இருக்குன்னு நான் வந்து கண்டுபிடிக்கிற துக்கு முன்னுடியே தெரிஞ்சிட்டிருக்கிற நீங்க சும்மா இப்படி ஒதுங்கி இருக்கலாமா?’’

"சும்மா இருக்காமே வேற என்னதான் செய்யனும் கிறீங்க? எங்கப்பாவுக்கு அவரை விமர்சிக்கிறதோ எதிர்த்துப் பேசி விவாதிக்கிறதோ அறவே பிடிக்காது. நானும் எங்கண்ண னும் எதிர்த்துப் பேசிப் பேசிச் சோம்யேறி, உருப்படாதவன்னு அவர்கிட்டே சைவு வாங்கினதுதான் மிச்சம். எதிர்த்துப் பேசாமல் அப்பாவைப் புகழ்ந்து செல்லப் பெண் ஆகிவிட்டாள் தங்கை, அவரை முகஸ்துதி பண்ணிக் கை கட்டி வாய் பொத்தி நின்னவனெல்லாம் ஊழியன்கிற பேரைப் பெற்றுச் சுரண்டிக் கொட்டிக்கிருன்கள்.'"

"அப்போ இதை எல்லாம் சரிப்படுத்த என்னதான் வழி?"

"வழி இருக்கு ஆளுல் அது நடைமுறையிலே சாத்தியமா இல்லையான்னுதான் எனக்குப் புரியலே. இன்னிக்கு நான் ஒரு வார்த்தை ஃபோன் பண்ணிக் கிரீன் ஸிக்னல் கொடுத்தா எங்கண்ணன் டில்லியிலேர்ந்து இங்கே வரத் தயாராக இருக்கான். ஆளுல் இவருக்கும் அவனுக்கும் ஒத்துக்காது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/164&oldid=565832" இலிருந்து மீள்விக்கப்பட்டது