பக்கம்:சுலபா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дрт. гій. 163

'உங்க யோசனைகளைத் தாராளமாக எங்கிட்டே சொல்லுங்க, குமரேசன்! இத்தனை தூரம் வேலை மெனக் கெட்டுப் புறப்பட்டு வந்து தங்கி தான் நோயாளியைக் காப்பாற்ருமல் திரும்பிப் போளுல் எப்படி?’’

"இப்ப இருக்கிற ஸெங்-லைஃப்பைக் கம்ப்ளிட்டா மாத்தனும்! முழுக்க முழுக்கப் புது ரத்தத்தைப் புகுத்தணும். மூணு மாசச் சம்பளத்தைக் கையிலே கொடுத்தாவது பார்கவி யிலே இப்போ வேலை பார்க்கிற அத்தனைபேரையும் வெளியிலே அனுப்பணும். இதிலே தயவு தாட்சண்யமே கூடாது! ஒருத் தனை மீதம் வைத்துக்கொண்டால்கூட ஒரு குடம் பாலில் துளி விஷம் மாதிரி ஆகிப்போயிடும். இவங்க எல்லோருமே சம்பளத் துக்குச் சம்பளமும் வாங்கிக்கிட்டுக் கிளம்பமும் பன்றவங்க. ஹோட்டல் தொழிலுக்குப் பரிச்சயமான டிஸண்ட் ஆட்களை நல்ல சம்பளத்திலே நியமிக்கணும். ஆனல் இந்த மறுபரி சீலனை, விமரிசனங்கள் மாறுதல்களுக்கு எங்கப்பா ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார் மிஸ்டர் குப்தா."

7

ஆடிபிடீர் அனந்துக்கே கூடிக் குமரேசனின் விளக் கங்கள் ஆச்சரியத்தை அளித்தன. சினவடிவேலு இவனைப் போய்ச் சோம்பேறி, ஊர் சுற்றி என்கிருரே என்று அவர் மேல் கோபம் வந்தது. ஆடிட்டரே நேரடியாகப் பேச்சில் குறுக்கிட்டு, * சுற்றிச் சுற்றிச் செக்கு மாடு மாதிரி ஒரே இடித்திலே வந்து நின்னுடறியேப்பா இதிலேர்ந்து மீள என்ன வழி?' என்று குமரேசனக் கேட்டார்.

குமரேசன் சிரித்தான். பின்பு பதில் சொன்னன். வழி கண்டுபிடிக்க மருந்து சொல்லறக்குத்தான் குப்தா சார் வந்திருக்காரே...'

"நான் நோயைக் கண்டுபிடிச்சாச்சு: மருந்தையும் தீர்மானம் பண்ணியாச்சு. ஒரு பெரிய ஆச்சரியம் என்ளுேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/165&oldid=565833" இலிருந்து மீள்விக்கப்பட்டது