பக்கம்:சுலபா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

நா.பா.

குடியிருந்து இன்ைெருத்தன்கீழே கைகட்டிச் சேவகம் பன்னிட்டிருக்கான். நான் பட்டி மன்றம் பேசிக் கைச் செல வுக்குப் பத்து நூறு சம்பாதிக்கிறேன். எங்கம்மா ஒடுங்கிப் போயாச்சு, தங்கிச்சி ரத்த சோகை பிடிச்சமாதிரி வளர்ச்சி யில்லாமல் இருக்கிருள்.

'நீங்களும் எங்களோட ஒத்துழைச்சால் எல்லாத்தையுமே ஆரோக்கியமா மாத்திக்க முடியும். மாத்தியாகணும். உங்கப் பாவே சாசுவதமாக உலகத்திலே இருக்கப் போறதில்லே. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ இருந்தாலே பெரிய காரியம்.'"

"ஆனால் அந்த அஞ்சு வருஷம் பத்துவருஷத்துக்குள்ளே எல்லாமே திவாலாகிப் போயிரும். கரும்பாயிரம்வகையறாக்கவி கூழைக் கும்பிடு போட்டே எங்கப்பாவைச் சுரண்டித் தின் னுடப் போருங்க”

ஆறே மாசத்திலே ஒழுங்குபடுத்தலாம்! கவலைப்படா தீங்க குமரேசன்."

"பவர் ஆஃப் அட்டர்னி வாங்கிக்கிட்டு எங்கப்பாவை ஆறு மாசம் ஃபாரின் டுரோ க்ஷேத்திராடனமோ அனுப்பிச்சாத் தான் நீங்க நினைக்கிற சீர்திருத்தங்களை எல்லாம் பண்ண முடி, யும். அவரைப் பக்கத்திலே வைச்சுகிட்டு எதையுமே பண்ண முடியும்னு எனக்குத் தோணலே. ரொம்பக் கஷ்டப்படும்."

"ஏன் அப்படிச் சொல்றீங்க! உங்க ஃபாதர் எந்த வகை யிலே இடைஞ்சலா இருப்பார்?"

ஓடவும் விடமாட்டார், நிற்கவும் விடமாட்டார்! கரும்பாயிரத்தை டிஸ்மிஸ் பன்னிக் கணக்குத் தீர்த்து அனுப்பிச்சிங்கன்ன அவன் நேரே ஒடிப்போய் முதலாளி நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்"ன்னு அப்பா கால்லே நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிடுவான். அப்பாவுக்கு ஒரு விக்னஸ். காலிலே விழுந்துட்டால் மனசு இளகிடும். அவனைக்

சு-11 . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/167&oldid=565835" இலிருந்து மீள்விக்கப்பட்டது