பக்கம்:சுலபா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. . 167

வளர்ச்சியின்றி மாறுதலும் மாறுதலின்றி வளர்ச்சியும் கிடையா துங்கிறதை எங்கப்பா ஒப்புக்க மாட்டார். அதுதான் பிரச்னை. அதனாலே மாறுதலை அடிப்படையாகக் கொண்ட வளர்ச் சிக்கு முதற்கட்டமாக நீங்க செய்யணுங்கிற மாறுதலுக்கு அவர் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை."

"அவரை இங்கேயே வைத்துக் கொண்டு "ஆபரேஷன் நியு பார்கவி முடியாதுங்கிறீங்க?" * !

"ஐ'யம் ஹண்ட்ரெப் பர்யெண்ட் ஷ்யூர் எபௌட் இட்"

"அப்போ வெளிநாட்டுப் பயண யோசனைதான் சரியான காரியம்." .

ரொம்ப சரி, அந்த யோசனையை அவர்கிட்டே யார் சொல்லறதுங்கிறதுதான் இப்ப கேள்வி, பூனைக்கு யார் மணி யைக் கட்டி விடறது? யார் கட்டி விட்டால் பூனை மணியைக் கட்டிக் கொள்ளும் என்பதெல்லாம் தான் பிரச்சிஜன."

'அந்த விஷயத்தை நாங்க பார்த்துக்கருேம். மிஸ்டர் குமரேசன் ஆறு மாசமோ, ஒரு வருஷமோ அவரை வெளி நாட்டுக்குக் கப்பலேத்தி அனுப்பிடறது எங்க பொறுப்பு."

"அது அத்தனை சுலபமில்லை மிஸ்டிர் குப்தா அப்பா வோட பிறவிக் குணங்களில் ஒன்று கஞ்சத்தனம். இந்த வயசுக்கு மேலே நாங்க உலகத்தைச் சுற்றிப் பார்த்து என்ன ஆகப் போகிறது: அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். வீண் செலவு'ன்னுடுவார்"

பின்னே என்னதான் வழி அவர் இங்கேயே கூட இருந் தால் ஒண்ணுமே மாறுதல் செய்ய முடியாதுங்கறீங்க. வெளியே புறப்பட்டுப் போகவும் சம்மதிக்க மாட்டார்ன்னு

சொல்றீங்க. ஆபரேஷன் நியூ பார்கவியை எப்படி லாஞ்ச் பன்றது?’’ .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/169&oldid=565837" இலிருந்து மீள்விக்கப்பட்டது