பக்கம்:சுலபா.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பார்கவி

"அப்பாவே சம்மதிச்சு வெளிநாடு கிளம்ப ஒரே ஒரு வழி தான் இருக்கு, அதுக்கு மட்டும் அவர் கட்டுப்படுவார்."

'என்ன?' என்று குப்தா ஆடிட்டர் இருவருமே ஏக காலத்தில் குமரேசனே ஆவலோடு கேட்டினர். எப்படியாவது பிரச்சினை தீர்ந்தால் போதும் என்றிருந்தது அவர்களுக்கு.

'இதற்காக அவருடைய ஆஸ்தான ஜோசியர் கடுக்கை யூர் கண்ணபிரான அணுகி அவர் மூலமாக இந்த வெளி நாட்டுப் பயண யோசனை அப்பாவுக்குப் போகணும். குப் தாவோ ஆடிட்டரோ நானே அண்ணனே இதிலே சம்பந்தப் பட்டிருக்கோம்னாக்கூட அவர் சந்தேகப்படுவார். ஸ்பாண்டே னியஸ்ா ஜோசியரே தேடிவந்து பேசிக்கிட்டிருக்கிருப் போல இந்த ஃபாரின் ட்ரிப்பைப் பற்றி யோசனை சொல்லணும்.'

"அந்த ஜோஸியர் எப்படிப்பட்டவர்? ஒத்துவரக்கூடிய ஆளா? உங்கப்பா மாதிரி முரண்டு பிடிக்கறவரா? அது தெரிய ணுமே?' குப்தா கடுக்கையூர் பற்றி உடனே விசாரித்தான்,

"கடுக்கையூராருக்கு எங்கப்பா பத்து ரூபாய் குடுப்பாரு, நாம் நூறு ரூபாய் குடுத்தா சொன்னபடி கேட்டுட்டுப் போருரு." -

"ஆனா அவருக்குக் கூட நிஜமான காரணம் தெரியப் படாது. பின்னலே வம்பு! அதுேைல தினுசாச் சொல்லணும். வாழ்நாள் பூராவும் இந்தக் கிராமத்திலேயே கிடந்து உழல் கிருர், கொஞ்சம் வசதியா அவரை உலகம் சுத்திப்பார்க்க ஏற்பாடு பண்ணனும்னு நினைக்கிருேம். செலவுக்குப் பயந்து மாட்டேம்பாரு. அவர் நன்மைக்காக நீங்கதான் அதை வற்புறுத்திச் சொல்லிப் பிரயாணத்துக்கு அவரைச் சம்மதிக்க வைக்கணும்னு கடுக்கையூரார்கிட்டி நம்ம அப்ரோக் இருக் கணும்,' என்ருர் ஆடிட்டர்.

- 'இல்லாட்டா அநாவசியமா ஃபேமிலி மேட்டர்ஸ் வெளியிலே வதந்தியாகி நாறிப் போகும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/170&oldid=565838" இலிருந்து மீள்விக்கப்பட்டது