பக்கம்:சுலபா.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$70 பார்கவி

"கன்னிப் பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு-அதாவது பஜ்ரங்பலி மந்திருக்குப் போய் அடிக்கடி சுற்றினுல் சீக்கிரம் கல்யாணம் ஆகும்னு இங்கே தெற்கே ஒரு நம்பிக்கை உண்டுங் கிருங்களே...?"

பார்கவியின் முகம் குங்குமமாய்ச் சிவந்தது.

"என்னடி, நான் கேட்கிறேன். நீ பாட்டுக்குப் பதிலே சொல்லாமல் இருக்கிருய்?" -

"நீங்க என்னைக் கேலி பன்றிங்க அக்கா."

"கேலி ஒன்னும் இல்லேடி சும்மா ஒரு அகடெமிக் இண்ட்ரெஸ்டிலேதான் கேட்டேன்."

"ஆமாம். அப்படி ஒரு நம்பிக்கை உண்டு. ஆளு நான் அந்தக் கோவிலுக்கு அடிக்கடி போகிறதுக்குக் காரணம் அது இல்லே அக்கா. இந்த மலை ஆஞ்சநேயர்தான் எங்களுக்குக் குலதெய்வம்.'

'பஜ்ரங் பலியே ஒரு கட்டைப் பிரம்மசாரி! ஒரு கட்டிைப் பிரம்மசாரியைப் போய் ஆன் பிள்ளைக்காக ஏங்கும் கன்னிப் பெண்கள் சுத்தறதிலேயும் வேண்டிக்கிறதிலேயும் என்ன அர்த்தம் இருக்க முடியும்? வேடிக்கையான பிரர்த்தனையாகத் தான் இருக்கிறது."

'பின்னென்ன? கல்யாணமாகாமே ஏங்கறவங்க انتهاه

பிரம்மச்சாரியைச் சுற்ருமல் கிழவனையா சுத்திகிட்டிருப் பாங்க?"

"அடி கள்ளி! கேட்டயேடி ஒரு கேள்வி செஞ்சுரி அடிச்ச மாதிரி! ஒண்னுந் தெரியாதவள் மாதிரி இருந்துக்கிட்டு.... என்னென்ன பேசறேடி நீ?"

இப்படித் திருமதி குப்தா வகையாகப் பார்கவியை மடக்கியபோது அவன் தலை குனிந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/172&oldid=565840" இலிருந்து மீள்விக்கப்பட்டது