பக்கம்:சுலபா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 171

அதுக்கில்லே அக்கா. கல்யாணமாகாத கன்னிப் பென் களின் ஏக்கம் கல்யாணமாகி இந்தப் பக்கம் ஒண்ணும் அந்தப் பக்கம் ஒண்ணுமா ரென்டு ரெண்டா வள்ளி-தேவானை ருக்மிணி-சத்தியபாமான்னு நிறுத்தி வச்சுக்கிட்டு ஜாலியா இருக்கிற முருகன், கிருஷ்ணனுக்கு எல்லாம் தெரிய நியாய மில்லே, கல்யாணமே ஆகாத அனுமாருக்குத்தான் அது. அனுபவரீதியாகத் தெரிஞ்சுருக்கும்னு நினைச்சோ என்னவோ, கன்னிப் பெண்கள் அனுமார் கோவிலைச் சுத்தறது அனுமார் படத்திலே வால் பக்கமாய்க் குங்குமப் பொட்டு வைக்கற துன்னெல்லாம் பழக்கமா இருக்கு."

"நாகி கேட்டது அகடெமிக் க்வஸ்சன்! நீ சொல்றது அனுபவபூர்வமான பதில்டி பார்கவி,' என்று கண்களைச் சிமிட்டினுள் மிஸஸ் குப்தா. இயற்கையிலேயே படு அழகான மிஸஸ் குப்தா கண்களைச் சிமிட்டும்போது மேலும் அழகா யிருந்தாள். அவளோடு பழக ஆரம்பித்தபின் பார்கவி எவ்வளவோ மாறியிருந்தாள். வெறும் மரப்பாச்சி மாதிரி, இருந்த அவளை உயிர்த் துடிப்புள்ளவளாக மாற்றியிருந்தாள் திருமதி குப்தா. அவளிடம் அப்படியே வசியப்பட்டுப் போயிருந்தாள் பார்கவி. - -

  • பார்கவி! உனக்கும் எனக்கும் நிறைய ஒத்துமை இருக்குடி! உங்கப்பாவும் ஒட்டில் வச்சிருக்கார். எங்கப்பாவும் ஒட்டில் வச்சிருக்கார். எங்கே தெரியுமா? சிம்லாவிலே, எங்க வீட்டுக்காரருக்குச் சொந்த ஊர் லக்னேச. இவரை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டதே ஒரு சுனாரஸ்யமான கதை. இப்போ உங்கப்பாவோடி ஒட்டல் இருக்கிற மாதிரி எங்கப்பா வோட சிம்லா ஒட்டல் நஷ்டத்திலே முழுகிப் போயிருந்தது. எங்கப்பாவுக்கு மெயின் பிஸினஸ் ஆப்பிள் வியாபாரம். சிம்லா விலேயும் சுற்றுப் புறக்திலேயும் மளுலியிலேயுமா நாலைந்து பெரிய ஆப்பிள் அர்ச்சார்ட்ஸ் சொந்தமா இருக்கு. ஆப்பிள்ல நிறையச் சம்பாதிச்சு, சிம்லாவிலே ஒரு பழைய ஒட்டலை விலக்கு வாங்கினர். அவரோடி போருத காலம் ஒட்டல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/173&oldid=565841" இலிருந்து மீள்விக்கப்பட்டது