பக்கம்:சுலபா.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பார்கவி

நடத்தத் தெரியாம ரொம்ப நஷ்டப்பட்டார். அப்பத்தான் இவர் அமெரிக்காவிலே எம்.பி.ஏ. முடிச்சிட்டு வந்து லக்னேவில இந்த மாதிரி நவீன பிராக்டீஸ் எடுபடாதுன்னு டெல்லியிலே கன்னாட் பிளேஸில் ஒரு மாடி அறையை வாடகைக்குப் பிடிச்சு பிஸினஸ் டாக்டர்’னு போர்டு மாட்டியிருந்தார். பிஸினஸ் டாக்டர்'ன என்னன்னே புரியாமே ரொம்பப் பேர் தலைவலின்னும் வயித்து வலின்னும் இவரைத் தேடி வந்து அறு அறுன்னு அறுத்துக்கிட்டிருந்த சமயத்திலே எங்கப்பாவுக்கு யாரோ விவரம் சொல்லி இவரைக் கூப்பிட்டால் ஒட்டலை லாபத்துக்குக் கொண்டு வந்துடுவார் ளுங்க. என் தம்பி அஜீத்தை டெல்லிக்கு அனுப்பி இவரை உடனே கையோட சிம்லாவுக்கு அழைத்து வரச் செய்தோம். அப்போ பிப்ரவரி மாசம். மார்ச், ஏப்ரல். மே, ஜூன், ஜூலை சிம்லாவிலே கோடை சீசன். அந்த சீசன் டியத்துக்கு முன்னுடியே ஒட்டலை ஒழுங்கு பண்ணிக்கணும்னுதான் இவரை பிப்ரவரியிலே அங்கே வரவழைச்சோம். இவரைச் சந்திச்ச திலேருந்து எனக்கும் இவருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.'

" லவ்வா அக்கா?’’

'அப்படித்தான்னு வச்சுக்கயேன்."

'உம்... சுவாரஸ்யமா இருக்கு. மேலே தொடர்ந்து சொல்லுங்க அக்கா!' - -

"அப்புறம் அந்த சீலன் முழுக்க சிம்லாவிலேயே எங்க விட்டு மாடியிலேயே தங்கினர்.இவர் கூறிய யோசனைகளின்படி அப்பாவும், என் தம்பி அஜித்தும் ஒட்டிலை நடத்தினதில் அந்த சீஸன் முடிவிலேயே லாபம் தெரிஞ்சுது. இவர் டில்லி புறப் படித் தயாராளுர்.' . . . . .

"அப்புறம்...?"

'கேளுடீ சுவாரஸ்யமான திருப்பம் இப்புத்தான் வரப் - போறது. அப்பாவுக்கும் என் தம்பிக்கும் இவரை ரொம்பப் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/174&oldid=565842" இலிருந்து மீள்விக்கப்பட்டது