பக்கம்:சுலபா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣт.tar, ፲78

பிடிச்சுப் போச்சு. ரெண்டு சாதிக்காய்ப் பெட்டி நிறை "ஏ" கிரேடு கோல்டன் டெலிவியஸ் ஆப்பிளை எடுத்து வச்சுத் தொகை போடாத கையெழுத்துப் போட்டு ஒரு 'செக் லிஃபை நீட்டி நீங்க விரும்புற தொகையைப் போட்டுக்கலாம்’ளுங்க, இவர் புன்புறுவல் பூத்தார். நான் இதிலே எதைப் பூர்த்தி பன்னிலுைம் குடுப்பிங்களா'ன்னு எங்கப்பாவைப் பார்த்துக் கேட்டார் நிச்சயமாகக் குடுப்பேன்’ என்ருர் எங்கப்பா.”

'உடனே இவர் பேளு வைத் திறந்து செக்கிலே காலியா யிருந்த இடத்திலே, சுஷ்மாவை எனக்குக் கல்யாணம் செய்து கொடுக்கவும் என்று சிரித்துக் கொண்டே என் பெயரை எழுதி எங்கப்பாவிடம் நீட்டினர்."

இந்த இடத்தில் பார்கவி தமிழ் சினிமா ரசிகைபோல் உற்சாக மேலிட்டுக் கரகோஷம் செய்தாள். சில நிமிஷங் களுக்கு நிற்காமல் தொடர்ந்தது அவள் கைதட்டல்.

"அவசரப்படாதே! கேள்...எங்கப்பா உடனே அதுக்குச் சம்மதிக்கலே இரண்டு நாள் தங்குங்கள்! என் முடிவைச் சொல்கிறேன்" என்று அமுத்தலாக இவருக்குப் பதில் சொல்லி விடவே எனக்குக் கவலையாய்ப் போயிற்று. தம்பி அஜீத்தை லக்னோவுக்கு அனுப்பி இவருடைய பூர்வோத்தரங்களை விசாரித்த அப்பா இவரே பெரிய கோடீசுவரன் வீட்டுப் பிள்ளை என்று தெரிந்ததும் பயந்துவிட்டார். -

"மிஸ்டர் குப்தா நான் பரம ஏழை! உங்க பெற்ருேர் என்னேடி மகளை நீங்கக் கட்டிக்கச் சம்மதிப்பாங்களா?' என்று இவரை எங்கப்பா கேட்டார். -

"என் பெற்ருேர் நான் சொல்றதைக் கேட்பாங்க. எனக்குப் பிடித்த பெண்ணே நான் மணந்து கொள்வதை அவர்கள் விரும்புவார்கள்' என்ருர் இவர். அப்புறம் அடுத்த வாரமே எங்க கல்யாண்ம் நடந்ததடி பார்கவி!'

'ஏதோ இந்தி சினிமா பார்கிற மாதிரி இருக்கே அக்கா' என்று சுஷ்மா குப்தாவைக் கிண்டல் செய்தாள் பார்கவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/175&oldid=565843" இலிருந்து மீள்விக்கப்பட்டது