பக்கம்:சுலபா.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பார்கவி.

உடனே கேட்டாள். 'உங்கப்பாவோட சிம்லா ஒட்டில் இப்போ எப்படி இருக்கு அக்கா?'

'இப்போ அது அப்பா நிர்வாகத்திலே இல்லேடி அவர் ஆப்பிள் தோட்டங்களோடு நின்றுவிட்டார். என் தம்பி அஜீத் ஒட்டலைப் பிரமாதமா நடத்தருன். இன்னிக்குத் தேதியிலே சிம்லாவிலே முதல்தரமான ஒட்டல் அதுதான்."

"அப்போ உங்க கணவர் சிகிச்சையிலே எங்க ஒட்டலும் பிழைச்சுடும்னு சொல்லுங்க அக்கா!'

"ஒரே ஒரு வித்தியாசம்! எங்கப்பா என் தம்பிக்குச் சின்ன வயசாச்சேன்னு தயங்காமே பிஸினஸ் டிாக்டர் கூறியபடி ஒட்டல் நிர்வாகத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். என் தம்பி அஜீத்தும் கடினமா உழைச்சு லாபம் பார்த்து இன்னிக்கு நைநிடால்லே இன்ைெரு ஒட்டலையும் கட்டிக்கொண்டிருக்கிருன். நைநிடிால் ஒட்டிலைத் திறந்து லாபம் காட்டுகிறவரை அவனுடைய திருமணத்தைக்கூட ஒத்திப் போட்டிருக்கிருன் என்ருல் பார்த்துக்கொள்! உங்கப் பாவும் தன் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் அளித்து ஒட்டிலை வளர்க்கச் சொல்லணும்னு என் கணவர் அபிப்பிராயப்படுகிருர் Litrířssí?.**

"எங்கப்பாவா...?" என்று இழுத்து வாக்கியத்தை முடிக் காமல் நிறுத்தினுள் பார்கவி. -

என்னடி மழுப்பறே? உங்கப்பா செய்யமாட்டாரா? ஒட்டில் தொழில், சினிமாத் தொழில் இதெல்லாம் இளமையும், சுறுசுறுப்பும் உற்சாகமும் மேலும் மேலும் ஒன்றை அழகுப் படுத்திப் பயனடைய வேண்டும் என்கிற முனைப்பும் உள்ள வர்கள் மட்டுமே செய்ய முடிந்தவை. ஸினிக்காகவும் வறட்சி யாகவும் கஞ்சத்தனமாகவும் இருக்கிறவர்கள். ஒடியாடி உற்சாகமாக உழைக்க இயலாத முதியவர்கள் ஆகியோருக்கு இந்தத் தொழிலை வளப்படுத்த வாய்ப்புக் குறைவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/176&oldid=565844" இலிருந்து மீள்விக்கப்பட்டது