பக்கம்:சுலபா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 齡級」牌

தில் அடைய முடியாத எதையோ எண்ணித் தன் எஜமானி தவிப்பது போல் கவிதாவுக்குத் தோன்றியது.

அதைச் சுலபாவிடம் எப்படி விசாரிப்பது என்று தயங் கிள்ை. விசாரிப்பது நாசூக்காக இராததோடு அதிகப் பிரசங்கித்தனமாகி விடுமோ என்றும் பயமாக இருந்தது. விரக்தியும். சலிப்பும் கலையின் எதிரிகள் என்பது கவிதாவுக்குப் புரிந்திருந்தது. அதனுல்தான் அவள் தன் எஜமானியைப் பற்றிக் கவலைப் பட்டாள்.

சுலபாவின் ஆடிட்டரும் தன் தாய் மாமனுமான ஆடிட்டர் கனகசபாபதியிடம் போய் இந்த நிலைமையைத் தெரிவித்து யோசனை கேட்டாள் கவிதா. ஒரே இடம் ஒரே தொழில், ஒரே மாதிரி மூஞ்சிகளைப் பார்த்துப் போர்டம்’ ஆகியிருக்கும். எங்கேயாவது ஃபாரின் டிரிப் அடிச்சிட்டு வரச் சொல்லி யோசனை சொல்லிப் பாரேன்'-என்ருர் அவர்.

"நான் சொல்லப் போய் ஒரு வேளை எனக்கு ஃபாரின் டிரிப் போகணும்னு ஆசையோன்னு அணங்க தப்பாப் புரிஞ்சுக் கிட்டாங்கன்ன என்ன செய்யிறதுன்னுதான் பயமா இருக்கு மாமா'-என்ருள் கவிதா.

"அப்போ நீ பேசாமே இரு! நானே ஒரு நாள் நாளுத் தேடி வர்ா மாதிரி அவளைத் தேடி வரேன். அப்ப என் யோசனையாக நானே சொல்ற மாதிரி இதைச் சொல்றேன். நீயும் கூடி இரு'-என்ருர் கனகசபாபதி.

அவர் யோசனை கவிதாவுக்குப் பிடித்திருந்தது. 'ஒரு மாசம் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜப்பான் எல்லாம் சுத்திட்டு வான்னு யோசனை சொல்றேன் பாரு! உடனே சரீன்னுடுவா’-என்ருர் அவர்.

சொன்னபடி அவர் சுலபாவைத் தேடி வந்தார். பேச்சு வாக்கில் தம்முடைய யோசனையைச் சொன்னர். உற்சாகமாக விவரமாக வெளிநாட்டுப் பயணத்தை வர்ணித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/18&oldid=565686" இலிருந்து மீள்விக்கப்பட்டது