பக்கம்:சுலபா.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 179

"சொல்லலாம். ஆல்ை பொய்யாயிடப்படாதேன்னு பார்க்கிறேன்.”

"நல்ல காரியத்துக்காகச் சிவவடிவேலுவோட புகழுக்காக அவரோடி ஜோசியராகிய நீங்க ஒரு பொய் சொன்னல் கூடத் தப்பில்லேங்கிறது எங்க அபிப்ராயம் ஜோசியரே' என்று கூறியபடி ஒரு தட்டில் தயாராக வைத்திருந்த வெற்றிலே பாக்குப் பழத்துக்கு நடுவே இன்னும் ஒரு நூறு ரூபாய்த் தாளேச் செருகி எடுத்து நீட்டினர் ஆடிட்டர்.

'எந்த மாதிரி அவர் ஒப்புக் கொள்ற விதமாச் சொல்ல முடியும்னுதான் யோசிக்கிறேன்.’’ என்றபடியே தட்டிை வாங்கிக் கொண்டார் ஜோசியர்,

"அதெல்லாம் உங்க இஷ்டத்துக்கு விட்டுடருேம். வர்ற முதல் தேதி அவரும் ஆச்சியும் ஃபாரின் போருங்க. உங்களைத் தான் நம்பியிருக்கோம்.'

"உங்க நம்பிக்கை விண்போகாமல் நான் பார்த்து முடிச்சுக் கொடுக்கிறேன்.'

எப்படிச் செய்யப் போகிறீர், என்ன சொல்லப் போகிறீர்?" என்று கடுக்கையூராரை அவர்கள் துருவித் துருவிக் கேட்கவில்லை. அவர் இஷ்டப்படி விட்டுவிட்டார்கள்.

"சிவவடிவேலு சார் சில முக்கிய விஷயங்களிலே என்ைேட யோசனையைக் கேட்டுக் கிரக சஞ்சாரம் தசாபுத்தி களோட போக்கைத் தெரிஞ்சுக்காமே எதையும் பண்ணமாட் டார். இதுக்கு முன்னலேயேகூட ரெண்டொரு தரம் எங்க ஆடிட்டர் ஃபாரின் டிரிப் ஃபாரின் டிரிப்னு என்னை உயிரை, எடுக்கிருரே? ஜாதகம் என்ன சொல்லுது? கிரகங்கள் எப்படி இருக்குன்னெல்லாம் என்னைக் கன்ஸல்ட் பண்ணியிருக்கார். நான் அப்பல்லாம் கூட அவரை ஒரேயடியா டிஸ்கரேஜ் பண்ணிடல. சமயம் வரும், நானே உங்களுக்குச் சொல் றேன்"னுதான் தள்ளிப் போட்டிருக்கேன். ஒண்ணே ஒண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/181&oldid=565849" இலிருந்து மீள்விக்கப்பட்டது