பக்கம்:சுலபா.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 tawfī`ess?

அதிக நாட்கள் தங்கச் செய்து அவரது பிரயாண ஷெட்பூலைத் தயாரித்தால்கூட அட்லாண்டிக் ரூட்டில் கிளம்பி மறுபடி ஹவாய், ஹோனலுலு, ஜப்பான், ஹாங்காங். பாங்காக், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் வழியாகப் பசிபிக் ரூட்டில் திரும்ப ஆறு மாதத்துக்குள்தான் ஆகும்! அதுக்கு மேலே இழுக்க முடியாது."

'ஆறு மாதம் போதும்! அதுக்குள்ளே இந்த உலகத்தையே மாத்திப்பிடலாம்,' என்ருன் குப்தா.

'உலகத்தை மாத்திடீறது சுலபம்! ஆன எங்கப்பா பண்ணியிருக்கிற குழப்பங்களை மாத்தறது உலகத்தை மாத் தறதைவிடக் கஷ்டம்,' என்ருன் குமரேசன். அவளுல் இன்னும் முழுசாக நம்ப முடியவில்லை.

'அடி நீ சும்மா இருப்பாlஒரே பெஸிமிஸ்டிா இருக்கியே? உங்கப்பாவே மாறிக்கிட்டிருக்காரு. அவரே மாறுகிறப்போ அவர் பண்ணியிருக்கிற ஏற்பாடுகளை மாத்தறதா. கஷ்டிம்? நம்ம முயற்சியிலே, மலையையே புரட்டியாச்சு. அதாவது உங்கப்பாவையே ஆச்சியோடு ஃபாரின் ட்ரிப் போகத் துணியற அளவு மாத்திப் பிட்டோம். இனிமே மத்ததை மாத்தறது சுலபம்தான்.'"

"ஆச்சியோடி போருரா? மழைதான் கொட்டிப் போவுது. எச்சிக் கையாலே காக்காய் ஒட்ட மாட்டிாரு நூறு ரூபாய் முழு நோட்டி இருந்தா அதை மாத்தினல் எங்கே செலவழிஞ்சு போகுமோன்னு மாத்தமாட்டிாரு பத்து ரூபாய், ஐந்து ரூபாய்-அவ்வளவு ஏன் முழு ஒரு ரூபாய் நோட்டைக் கூட மாத்திளுச் செலவழிஞ்சிடுமேன்னு பயந்தே மாத்தமாட்டாரு. ஒரு ரூபாய்க்குக் கீழே சில்லறையா இருக்கிறதைத்தான் துணிஞ்சு செலவழிப்பாரு. அவரு மதுரைக்குப் போளுல்தான் கான்சசமேட்டுத் தெருக் கையேந்தி பவனுக்குப் போற இரகசியமே இதுதான்! அந்த ஒரு தண்ணிர்ப் பந்தல்லேதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/186&oldid=565854" இலிருந்து மீள்விக்கப்பட்டது