பக்கம்:சுலபா.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 185

ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு சுக்குக் காபி-மொத்த பில் தொண்ணுாற்றைந்து காசு வரும்! அப்படிப்பட்டி மனுஷன் இப்போ தானும் ஆச்சியுமா ஃபாரின் டிரிப் போகப் போருர்னல் பெரிய விஷயம். ஆஃப் சீஸன் கன்செஷன் ஏர் டிக்கெட்லே போனல் கூட ரெண்டு டிக்கெட் எழுபதியிைரம் வரை ஆகும். அப்புறம் செலவுக்கு ஃபாரின் எக்சேஞ்ச் வேற.லட்ச ரூபாய்க்கு மேலே ஆயிரும். ஒரு ரூபாயை மாத்தி அதைச் சில்லறை யாக்கிவிடத் தயங்கற அப்பா இப்போ ஒரு லட்சத்தை மாத்தப் பேருர்! என்னமோ புரட்சிதான் பன்றிங்க ஆடிட்டர் சார்!"

'கிரெடிட் கோஸ் டு கடுக்கையூர்! எல்லாம் அவர் பன்னின மாயம்தான் அப்பா!' என்ருர் ஆடிட்டர். குமரே சன் ஆடிட்டரிடமும் பிஸினஸ் டாக்டரிடமும் மகிழ்ச்சியோடு கை குலுக்கின்ை. இப்ப அக்டோபர் மாசம் சார்! உலக வரலாற்றிலே எது எதையோ அக்டோபர் புரட்சி, நவம்பர் புரட்சின்னெல்லாம் சொல்ருங்க. உண்மையிலே இதுதான் சார் குருபுரத்தைப் பொறுத்தவரை அக்டோபர்ப் புரட்சி. அடுத்த மாசம் அதாவது நவம்பர் ஒண்ணுந் தேதி எங்கப்பா ஃபாரின் புறப்படருரே அதுதான் நவம்பர்ப் புரட்சி!'

"குமரேசன், சரியான புரட்சிப் பேர்வழிதான்! எப்பவும் புரட்சியிலேயே இருக்கான் பாருங்க,' என்று சொல்லிச் சிரித்தார் ஆடிட்டர். -

" ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி! மாகாளி பார்கவியில் கடைக்கண் வைத்தாள்,' என்று பட்டி மன்றங் களில் பேசுவது போல் பாரதியார் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடிக் காட்டின்ை குமரேசன்.

"குமரேசா! உன் டில்லி அண்ணனுக்கு உடனே நான் சொன்னதாக ஒரு கடிதம் எழுது. அவனைப் பதினைந்து நாள் லிவு போட்டுவிட்டு மனைவியோடு இங்கே புறப்பட்டு வரச் சொல்லு.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/187&oldid=565855" இலிருந்து மீள்விக்கப்பட்டது