பக்கம்:சுலபா.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பார்கவி

"அவசரப்பட்டு அண்ணனை வரவழைத்தால் ஆபத்து சார்! அண்ணனைப் பார்த்ததுமே அப்பாவுக்கு எரிச்சன் கிளம்பி ஃபாரின் டிரிப்பையே கான்சல் பண்ணிடப் போருர்.'

"நெவர்: எக்காரணத்திலுைம் இந்த டிரிப் கான்லல் ஆகாது. ஜோசியர் ஸ்ட்ராங்கா என்னமோ பண்ணியி ருக்கார்.' .

ஒரு புரட்சி ஜோசியராலே நிகழ்ந்திருக்கிறது என்ருல் அது முதல் தடவையாக இப்போதுதான் உலக வரலாற்றி லேயே இந்தக் குருபுரத்திலே நடந்திருக்கிறது சார்!’’

'அட, நீ என்னப்பா இன்னமும் பட்டி மன்றத்திலேயும் கருத்தரங்கத்திலேயும் பேசற மாதிரியே உலக வரலாறு. புரட்சி அது இதுன்னு என்னென்னமோ பேசிட்டிருக்கே? உங்கண்ணனை வரவழைச்சு உருப்படியாச் சொத்துக்களைக் காப் பாத்தியாகணும். இல்லாட்டி சரக்கு மாஸ்டரும், கரும்பாயிர முமே உங்களை சைபராக்கிப்பிடுவாங்க..." :

அதெல்லாம் நடக்காது சார்! கசக்கிப் பிழிகிற வேகத் திலே கரும்பாயிரத்தைத் துரும்பாயிரமாப் பீஸ் பீஸ் ஆக்கிப் போட்டுருவேன்."

"கடைசி நிமிஷத்திலே பணம் அதிகம் செலவாகும் அது இதுன்னு சாக்குப் போக்குச் சொல்லி நிறுத்திடப் போருரு: நீங்களே டிராவல் அரேன்ஜ்மெண்ட்ஸைப் பண்ணுங்க. நீங்களே டிராவல் ஏஜென்ட் மூலமா பாஸ்போர்ட் ஏற்பாடும் கவனிச்சுக்குங்க” என்று குப்தா மீண்டும் ஆடிட்டரை எச்சரித்தான். ஆடிட்டர் மறுநாள் சிவவடிவேலு, திருமதி சிவவடிவேலுவிடம் உரிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் விசா வகையருவுக்காக ஒரு டஜன் போட்டோக்களையும் பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார்.

சிவவடிவேலு புறப்படுகிற தினத்தன்று எல்லா முக்கிய தினசரிகளிலும், உலக நாடுகளில் ஒட்டில் தொழிலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/188&oldid=565856" இலிருந்து மீள்விக்கப்பட்டது