பக்கம்:சுலபா.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣт - ат- 187

நுணுக்கங்களை அறிந்துவர ஒட்டில் பார்கவி அதிபர் துணைவி யுடன் பயணம், என்று சிவவடிவேலு தம்பதியர் படத்துடன் விளம்பரம் வரைேண்டும் என்று ஆடிட்டர் தயாரித்து எடுத்துக் கொண்டார். அந்த விளம்பர டிராஃப்ட்டைப் படித்துப் புன்னகை புரிந்த குமரேசன், 'உலக நாடுகளிலே அங்கங்கே உருப்படியா நடக்கிற ஒட்டல்களைக் கெடுக்காமல் எங்கப்பா திரும்பி வந்தாலே புண்ணியம் சார்' என்ருன்.

'ரொம்பத்தான் கிண்டல் பண்ணுதே! விளம்பரம்னு கொடுக்கறப்ப வேற எப்படிப்பா குடுக்கிறது?' என்று ஆடிட்டர் அவனைக் கடித்து கொண்டார். எதற்கும் சென்னை புறப்படு முன் ல்ை இவ்வளவு தூரம் காரியத்தை இசைவாக்கிக் கொடுத்த ஜோசியரை நேரில் பார்த்துவிட்டு வந்துவிடலாமே என்று மேலும் ஒரு முழுப் பச்சை நோட்டுடின் ஜோசியரைப் பார்க்கக் கிளம்பினர் ஆடிட்டர் அனந்த்.

"என்னய்யா மந்திரம் போட்டீர்? மனுஷன் பொட்டிப் பாம்பாய் அடங்கிப் போய்த் தானே பரம சாதுவா எங்கிட்டத் தேடி வந்து, "நீங்க பல தடவை சொன்ன யோசனையை இப்ப நசன் ஏத்துக்கிறேன். நானும் ஆச்சியும் ஃபாரின் ம்ரிப் போருேம். அரேன்ஜ் பண்ணிடுங்க"ன்னு கூலாச் சொல்லிம் டிாரே? எப்பிடி ஐயா இது முடிஞ்சுது?’ என்று ஜோசியரைப் பார்த்ததுமே ஆவல் தாங்காமல் கேட்டிார் ஆடிட்டர். -

"அது பரம ரகசியம் வேண்டாம். விட்டுடுங்க!' என்று

நழுவினர் ஜோசியர். ஆடிட்டரின் ஆவலை இது அதிக மாக்கியது. .

"பரவாயில்லை! நான் வேறு யாரிட்டிவும் சொல்ல மாட்டேன். எனக்குத் தெரியாத எந்த ரகசியமும் மிஸ்டர் சிளவடிவேலு குடும்பத்திலே கிடையாது. நான் வேறு யாரிடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/189&oldid=565857" இலிருந்து மீள்விக்கப்பட்டது