பக்கம்:சுலபா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

එරෝ

கனகசபாபதி சொல்லிய யோசனையைக் கேட்டுச் சுலபr சிரித்தாள். உடன் இருந்து அடக்கமாக நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த காரியதரிசி கவிதாவுக்கு அந்தச் சிரிப்பைக் கண்டு அவநம்பிக்கை தான் ஏற்பட்டது. தன் எஜமானி அம்மாளின் ஒவ்வொரு சலனத்தையும் பதவுரை பொழிப்புரை எழுதி அர்த்தப்படுத்தி விட அவளால் முடியும். உதடு அசையாமல்-இதழ்கள் பிரியாமல் புவினகை புரிந்தால் இன்ன அர்த்தம், வாய்விட்டுச் சிரித்தால் இன்ன அர்த்தம், முகத்தைச் சீரியஸ்ஸாக வைத்துக் கொண்டு பதில் சொல்லா மலே யோசித்தால் இன்ன அர்த்தம், "பார்க்கலாம்" என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்ல்ை இன்ன அர்த்தம், அவசி யம் செஞ்சுட வேண்டியதுதான்’-என்று கூறி விட்டு அமுத்த லாக இருந்தால் இன்ன அர்த்தம் என்பதை எல்லாம் கூடவே இருந்து நருைக ஸ்டடி பண்ணியிருந்தாள் கவிதா,

'இவள் படங்களில் நடிப்பதை உணர்ச்சிக் குவியல், நடிப் பின் சிகரம் என்றெல்லாம் கொண்டாடுகிருர்களே, அதை விடப் பிரமாதமாக வாழ்வில் அல்லவா நடிக்கிருள்? நடிக்கிற போது நடிப்பதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இவள் நடிப்பது நடிக்காத வேளைகளில்தான் -என்று கவிதாவுக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டிருந்தது, அதுதான் உண்மை என்ப தும் அவளுக்குள் உறுதிப்பட்டிருந்தது.

'இவள் மனம் இந்த வயசிலேயே ஆழம் காண முடியாத ஒரு சமுத்திரம் மாதிரி இருக்கே? அந்தச் சமுத்திரத்திலே எங்கே நல்முத்துச் சிப்பிகளும் வலம் புரிச் சங்கும் பவழமும், இருக்கின்றன. எங்கே ஆபத்தான சுருமீன்களும். திமிங்கிலங் களும், கடற் சிலந்தியும் இருக்கின்றன என்பதை எல்லாம் பிரித்துக் கண்டு பிடிக்க முடியாமலிருந்தது. எப்போது எது கிடைக்கும் என்பதும் புதிராகவே இருந்தது. r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/19&oldid=565687" இலிருந்து மீள்விக்கப்பட்டது