பக்கம்:சுலபா.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jor.Lig, 191

பசரி! தைச்சுத் தொலைக்கலாம்' என்று வேண்டா வெறுப்பாகத்தான் டைலருக்கு அளவு கொடுத்தார். சிவவடிவேலு. இப்படி ஒவ்வொரு கட்டித்திலும் அவரை மன்றாடி ஜாக்கி போட்டுத் தூக்கி நிறுத்தித் தயாரிப்படுத்த வேண்டியிருந்தது. -

இந்தாங்க ஆடிட்டர் சார்! கார்டிமம் எக்ஸ்போர்ட் மார்க்கெட் விலை டல்லாயிருக்கிறாப்புலத் தெரியுது. பார்கவி பாட்டுக்கு அவசரப்பட்டுடப் போவுது. பிரைஸ் தூக்கலா இருக்கிறப்ப கோடெளன்லே இருக்கிற ஏலக்காயை வெளியில விடுங்க கவனம்’’ என்று ஆடிட்டரை எச்சரித்தார். கடைசி நிமிஷம் வரை இப்படித் தொணதொணப்பு நீடித்தது.

"பிஸினஸ் லைத்தியரு என்ன சீர்த்திருத்தம் வேனும் னாப் பண்ணட்டும். கரும்பாயிரத்தைக் கலந்து பேசிப் பன் னுங்க. ரொம்ப நன்றி விசுவாசமுள்ளவன். அவன் எனக்குத் துரோகம் நினைக்க மாட்டான். அவன் இல்லாமே ஒட்டல் பார்கவி இல்லே," என்றார். அவர்களுக்குப் பகீரென்றது.

வலது காதில் வில்வப் பூ, கழுத்தில் ருத்ராம்சம், முகத்தில் ஒரு சந்தனக் கீற்று. அதன்மேல் விபூதி, அதற்கும் மேல் ரெட்டைக் குங்குமப் பொட்டு, பருத்த சரீரம்-இத்யாதி லட்ச ணங்களுடன் கரும்பாயிரத்தை நினைத்தபோதே ஒரு நவீன ஒட்டல் மானேஜராகத் தெரியவில்லை. குப்தாவுக்கு ஒரே எரிச்சல். கிராமக் கணக்குப் பிள்ளையின் தோற்றம் அல்லது மிராசுதார் வீட்டுக் காரியஸ்தரின் அமைப்புள்ள ஒரு ருத்ராம்சப் பூனையை எப்படி ஒரு மாடர்ன் ஒட்டலில் நிர்வாகியா அனுமதிப்பது? -

சிவவடிவேலு கிளம்புகிற வரை அவர்கள் மூச்சு விட வில்லை. எல்லாரும் சிவவடிவேலு தம்பதிகளை மதுரை விமான நிலையத்திலேயே வழியனுப்பி வைத்தார்கள். ஆடிட்டர் அனந்த் மட்டும் பம்பாய் வரை போய்விட்டு வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/193&oldid=565861" இலிருந்து மீள்விக்கப்பட்டது