பக்கம்:சுலபா.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பார்கவி

கோட்டயத்தில் இந்த இன்ஸ்டிடியூட்டின் முதல்வர் குஞ்சம்மணியம்மா அவர்களே மிகவும் மரியாதையாக வரவேற் ருர், அன்பாகப் பேசினர். . -

இவர்கள் நடத்தப் போகும் ரெஸ்டாரென்டின் தரம், ஊர், இவர்களால் தரமுடிந்த சம்பள விகிதம் எல்லாம் தெரிந் தால் கேட்டரிங் டிப்ளமா வாங்கித் தயாராக இருக்கும் பெண் களை அழைப்பதாகவும் 'அவர்களில் உங்களுக்குப் பிடித்தவர் களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்." என்றும் கூறினர்.

選5

குமரேசன் நினைத்தது போல் அந்தப் பயிற்சி நிறுவனத் திலிருந்து பெண்களே வேலைக்கு அழைத்துச் செல்லுவது அவ்வளவு சுலபமாயில்லை. கொச்சி ரெஸ்டாரென்ட் அதிபர் சிபாரிசுக் கடிதம் தந்ததனுலும் குப்தா, குமரேசன் இரு வருடைய பழகும் முறைகளாலும்தான் ஓரளவு மரியாதையான் வரவேற்பு கிடைத்தது. கூலிக்குச் சித்தாள் பிடிப்பது போல ஆட்களை அவர்களிடமிருந்து அமர்த்தமுடியாதென்று தெளி வாகப் புரிந்தது. இவர்களும் அப்படி அமர்த்த விரும்பவில்லை.

குஞ்சம்மணியம்மா சொன்னாள் :

"எங்ககிட்ட இங்கே டிரெயினிங் பெற்று டிப்ளமா வாங்கின சில பெண்கள் ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கிருர்கள். நீங்கள் ஒரு கோரிக்கை லெட்டர் எழுதிக் கொடுத்தால் எங்கள் ஸ்தாபனத்தின் இன்ஸ்பெக்ஷன் ஆட்கள் வந்து உடனே உங்கள் ரெஸ்ட்டாரெண்டை இன்ஸ்பெக்ட் செய்து எங்கள் பெண்களை அங்கே வேலை பார்க்க அனுப்பலாமா என்று எங்களுக்கு ஒப்பீனியன் அனுப்புவார்கள். அதன்பிறகுதான் பெண்களை அனுப்புவோம். இதெல்லாம் ஜஸ்ட் ஃபார்மா லிட்டிஸ். நீங்க தப்ப நினைக்கப்படாது. சில வாரங்களுக்கு முன்னே யாரோ கோயம்புத்துர்ப் பக்கத்திலேர்ந்து வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/202&oldid=565870" இலிருந்து மீள்விக்கப்பட்டது