பக்கம்:சுலபா.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 20+

ரொம்பக் கொச்சையா எப்படி எங்களை அணுகறதுன்னு கூடத் தெரியாமே, "பொண்ணுங்க வேணும்."னு கேட்டாங்க. வந்த விதம் கேட்ட தினுசு எதுவுமே டிசண்டா இல்லே! விலாசம் கேட்டோம் மூங்கில் முறிச்சான்பாளையம்னு ஒரு அட்ரஸ் குடுத்தார். அங்கே எங்க இன்ஸ்பெக்ஷன் டிமை அனுப்பிப் பர்னத்தா அவர் குடுத்த அட்ரஸ் ஒரு சாராயக் கடையாயிருந் தது.” :

'அடப் பாவமே! நீங்க ஜாக்கிரதையாத்தான் இருக் கணும்,' என்றான் குமரேசன். . . . . .

அது ஒரு சமூக சேவை நிறுவனமாக இருப்பதையும் சுருரான விதிமுறைகள் இருப்பதையும் புரிந்துகொண்டிருந்த காரணத்தால் குமரேசனும் குப்தாவும் சிணுங்காமல் பல பாாங் களைப் பூர்த்தி செய்து பல நிபந்தனைகளில் கையொப்பமிட்டு அந்த இன்ஸ்டிட்டியூட்டின் இன்ஸ்பெக்ஷன் டீம் பார்கவிக்கு வந்து போகச் செலவுத் தொகையையும்கூட முன்பணமாகக் கட்டி விட்டார்கள். இவர்கள் இருவரும் வந்தவிதம் அறிமுகக் கடிதம். பழகிய தினுசு, எல்லாவற்றையும் பார்த்தபின்பே இன்ஸ்டிட்யூட்காரர்கள் நம்பிக்கை கொண்டனர்.

அதற்கு அப்புறம்தான் குஞ்சம்மணியம்மா இவர்களுக்கு டிப்ளமா வாங்கி வேலைக்கு வரத் தயாராயிருக்கும் பெண்களை அறிமுகப்படுத்தினள்.

"நீங்க தனியா ஒரு செலக்ஷன் என்று சிரமப்படி வேண்டி யதில்லை. பொதுவா நாங்க இங்கே படிக்க செலக்ட் பன்ற போதே ஆப்டிடியூட் டெஸ்ட்’னு வச்சுடருேம். இலட்சண மாயிருக்கிற-கடிந்து பேசாத-நன்ருகப் பழகக்கூடிய பெண் களாகத்தான் எடுக்கிருேம். மலையாளம் தவிர வேற மொழி களையும் கத்துக்கொடுக்கிருேம். ஒரு ஜாப் செக்யூரிட்டிக் காகவும் இதிலே படிக்க வர்றவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரணும்கிறதுக்காகவும் மினிமம் எதிர்பார்க்கிற ஸ்கேல் ஆஃப் புே என ஒன்று நாங்களே குறிப்பிடுவது வழக்கம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/203&oldid=565871" இலிருந்து மீள்விக்கப்பட்டது