பக்கம்:சுலபா.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣт.шт. 205

யோசனை சொல்றான் பாரு! என்ன நுணுக்கமா ஒரு வார்த் தையை நடுவிலே போடருன்! குமரேசன் ஆயிரமிருந்தாலும் விடலைப் பையன்தான்! அழகு, இளமை, சுறுசுறுப்பிலேயே மயங்கிப் போயிருக்கானே தவிர மரியாதையைப் பத்திக் கவலையே படல" என்று குமரேசனைச் சீண்டினர்.

குமரேசனும் அவரை லேசில் விட்டுவிடவில்லை. இதேச பாருங்க ஆடிட்டர் சார்! சும்மா விடலை அது இதுன்னு ராங் சைடுலே ரப் பண்ணுதிங்க. அண்ணன் சொல்றதைக் சேர்த்துக்கறேன். ஆளு நான் இதை எந்த வகையிலும் சீப்பா எழுதிடலே. சீப்பாவும் கொச்சையாவும் இதை மொழி பெயர்க்கிறதுங்கிறது எப்படித் தெரியுமா? ஒரு வம்புக்காக அதையும் உங்களுக்குப் பண்ணிக் காட்டறேன் பாருங்க' என்று வேறு ஒரு காகிதத்தை எடுத்து அவசர அவசரமாக எழுத ஆரம்பித்தான் குமரேசன்.

'பருவ மங்கை பார்கவி எங்கே? எப்போது? விரைவில் எதிர்பாருங்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே சமயத்தில் ஐந்து பருவப் பாவையர் பணிபுரியும் கவர்ச்சி உணவகம்! பார்க்கவும் பருகவும். மகிழவும் உடனே வருக நியூ பார்கவி. ஏ. சி. உணவகம் குருபுரம் ஹைலேண்ட்ஸ்" என்று எழுதி நீட்டின்ை. -

உங்கிட்ட விவாதிக்க முடியுமா குமரு? நீ பட்டிமன்ற ஆளாச்சே? இலேசிலே விடுவியா? நான் வாபஸ் வாங்கிக் கறேன்' என்று கைகளை மேலே தூக்கிவிட்டார் ஆடிட்டர்.

"நம்ம தெப்பம்பட்டி டுரிங் தியேட்டரில் nக்ரம் லவ்"னு முதல் தரமான இங்கிலீஷ் நாவல் ஒண்ணே ஃபேஸ் பண்ணி ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்காாங்க எடுத்த படம் ஒண்ணை ஒரு ஞாயிற்றுக்கிழமை நூன் ஷோ போட்டான். படத்திலே ஒரு ஹாட் சீன் கூட இல்லே. தியேட்டர்காரன் பார்த்தான். அவளுகவே தலைப்பைக் "கன்னியின் காமவெறி ரகசியங் கள்’னு போட்டு ஜட்டியோட ஒரு பொண் குளிக்கிறமாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/207&oldid=565875" இலிருந்து மீள்விக்கப்பட்டது